India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் இன்று 12-02-2025 இரவு 11.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
ரெட்டியார்சத்திரம் அருகே கள்ளக்காதலியின் கணவரை கொன்று ஜாமினில் வெளிவந்த வாலிபர் கொலையில் தனிப்படை போலீசார் விசாரித்து கள்ளக்காதலி கலைச்செல்வியின் அண்ணன் குமரேசன், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சபரிபாலன், சந்தனக்குமார், சங்கர்மணி, பெருமாள் முத்துச்சாமி சின்ராஜ் செல்லப்பாண்டி 8 பேரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கார் பறிமுதல் செய்து இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.
ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 241 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் குறைந்தபட்சம் 35 w.p.m வேகத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.சம்பளமாக 72,040 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
ஒட்டன்சத்திரம் குறிஞ்சி நகர் பைபாஸ் மேம்பாலத்தில் சென்னையில் இருந்து பழனி நோக்கி வந்த முருகவேல் என்பவர் ஓட்டி வந்த தனியார் சொகுசு பேருந்து முன்னதாக சென்று லாரியின் மீது மோது விபத்து ஏற்படுத்தியது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்து வந்த சென்னை பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல், வேலுத்தாய், தேவி, தன்வீர், ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 33 புதிய வழித்தடங்களும் பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 12 புதிய வழித்தடங்களும் மொத்தம் 45 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிவித்துள்ளார். மேற்கண்ட 45 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்க விரும்புவோர் வழித்தட விபரத்தினை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (பிப் . 11) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், ஒட்டன்சத்திரம், பழனி வேடசந்தூர், கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆர்.எம் காலனி பகுதியில் சலங்கை ஒலி டான்ஸ் பரதநாட்டிய பயிற்சி பள்ளி உள்ளது. இந்நிலையில் இன்று சலங்கை ஒலி டான்ஸ் அகாடமி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையா கலந்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஆன்லைனில் வாகனம் வாங்கும் போது முன்பணம் கட்டினால் தான் வாகனம் தருவோம் என கூறினால் முன்பணம் கட்டி ஏமாற வேண்டாம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காந்தி என்ற பெண், சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் கோவிலில் பஞ்சாமிர்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அறநிலையத்துறை சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்யாததால் பஞ்சாமிர்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பக்தர்கள் கூறியுள்ளனர். தட்டுப்பாடு காரணமாக தனியார் பஞ்சாமிர்த கடைகளில் இருந்து பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்கிச்செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.