India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொடைக்கானல் – பழநி ரோடு மேல்பள்ளம் வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியதால் ஏராளமான வனப்பகுதிகள் தீக்கிரையாகின. அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். கோடை வெயிலின் தாக்கம் தற்போதுஅதிகரித்துள்ள நிலையில், காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பெரும்பாலான விபத்துக்களில் தலையில் காயம் ஏற்படுவதால் மட்டுமே உயிரிழப்பு ஏற்படுகிறது.தலைக்கவசம் அணிவோம் உயிரிழப்பை தவிர்ப்போம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சாணார்பட்டி அருகே தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் 8, காளைகளின் உரிமையாளர்கள் 21, பார்வையாளர்கள் 7 மற்றும் உள்ளூர் பாதுகாப்பு குழு வீரர் 3 உட்பட 39 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 5 நபர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்லில் இன்று (பிப்.16) இரவு 11.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார் வயது 19 ஹாலோ பிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஆத்துமேடு நால்ரோட்டில் வந்த பொழுது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பிரேம்குமாரின் வலது கால் எலும்பு உடைந்தது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வேடசந்தூர் போலீசார் விசாரணை.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்<
பழனி அருகே பாலசமுத்திரம் பகுதியில் இருந்து பாலாறு அணை செல்லும் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மற்றொருவர், மருத்துவமனையில் உயிரிழந்தார். தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவரை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பேட்டரி வண்டிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, இதுவரை ₹30 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, ₹30 கோடி செலவில் புதிய சாலை போடப்பட்டுள்ளது. ₹15 கோடியில் லிப்ட் வசதியுடன் நகரும் நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. லக்கன்கோட்டை முதல் பழநி வரை 4 வழிச்சாலை அகலப்படுத்தப்பட்டு மரங்கள் நடப்பட்டுள்ளது. விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்றார்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தில் இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி பிரபாகர் மற்றும் நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவர் ஓட்டிச் சென்றனர். அப்போது அவர்களது பைக் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் பிரபாகர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று (பிப்.15) இரவு 11.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.