Dindigul

News February 22, 2025

பழனியில் இளநீர் வியாபாரி வெட்டிக்கொலை

image

பழனி கொடைக்கானல்ரோடு மாஸ்டர் பேக்கரி அருகே இளநீர் வியாபாரி ஆலமரத்துகுளம் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மகன் ஆரோக்கியசாமி(41) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன், சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் கொலை செய்யப்பட்ட ஆரோக்கியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 22, 2025

திண்டுக்கல்: பணி நியமன ஆணைகள் வழங்கிய அமைச்சர்

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரதில் இன்று மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தனியார் நிறுவனங்களில் சேர உள்ள விண்ணப்பதாரர் 60 பேருக்கு முதல்கட்டமாக அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

News February 22, 2025

அதிக அளவில் பாரம் ஏற்ற வேண்டாம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் பாரம் ஏற்றிச் செல்ல வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 22, 2025

வேலைவாய்ப்பு: திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் அமைந்துள்ள முன்னாள் படை வீரர்கள் ஓய்வு இல்லத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடத்திற்கு தொகுப்பு ஊதிய அடிப்படையில் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் எனவும், மேலும் விவரங்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் தலைமை அலுவலகத்தில் வரும் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

ஒட்டன்சத்திரம்: தொழில் முனைவோருக்கு சிறப்பு பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டின் பாலிடெக்னிக்கில் நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் இன்று புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உற்பத்தி சேவை போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது என மாவட்ட தொழில் மையம் இன்று அறிவித்துள்ளது. தொடர்புக்கு 0451-2904215

News February 22, 2025

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர்கள் பேச்சு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் இ.பெரியசாமி. அ.ர.சக்கரபாணி  கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பற்றி பேசினர்.

News February 22, 2025

திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.02.2025 அன்று சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளை கேட்டறியவும் உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

இலவச திருமணத்திற்கு உடனே முந்துங்கள்

image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் சார்பில் வரும் 3.3.2025 அன்று இலவச திருமணம் திண்டுக்கல் ஸ்ரீ அபிராமி அம்மன் திருக்கோயிலில் நடைபெற உள்ளது. இதில் மணமக்களுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் மற்றும் 4 கிராம் தங்க தாலி வழங்கப்பட உள்ளது. திருமணம் செய்ய விருப்பமுள்ள மணமக்கள் 9843575929 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2025

திண்டுக்கலில் இன்றைய நிகழ்வுகள்

image

திண்டுக்கலில் இன்றைய (பிப்.22) நிகழ்வுகள். ■பழனி சட்டமன்ற தொகுதி கொடைக்கானல் பகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை எம்எல்ஏ செந்தில்குமார் திறந்து வைக்கிறார். ■பழனி நெய்க்காரப்பட்டியில் போராளி பழனி பாபா பெரும்புகழ்ப் போற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் மாலை 4 மணிக்கு நடக்கிறது. ■ திண்டுக்கல் ஐ.என்.டி.யூ.சி., மாநில செயற்குழு கூட்டம் நாயுடு மஹாஜன மஹாலில் காலை 10 முதல் மாலை 4 மணி நடக்கிறது.

News February 22, 2025

My v3ads-ல் முதலீடு செய்தவரா நீங்கள்?

image

கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, திண்டுக்கல் மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!