Dindigul

News February 23, 2025

காங்கிரஸ் மாவட்ட, மாநில நிர்வாகிகளை கண்டித்து போஸ்டர்

image

திண்டுக்கல் நகர் முழுவதும் காங்கிரஸ் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் வால்போஸ்டர் ஒட்டியிருந்தனர். அந்த போஸ்டரில், அகில இந்திய காங்கிரஸ் கட்டுப்பாட்டை மீறி பொய் புகார் அளித்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம் என்று இருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

News February 23, 2025

பைக் மீது பேருந்து மோதி விபத்து 

image

வேடசந்தூர் அருகே உள்ள காளணம்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ்(30). இவர் தனது 10 வயது மகன் மற்றும் 7 வயது மகளுடன் ஸ்கூட்டியில் வேடசந்தூர் வந்துவிட்டு மீண்டும் தனது ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தார். மாசம்மாள் மல்லம்மாள் கோவில் அருகே சென்ற பொழுது திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மகனும், மகளும் படுகாயம் அடைந்தனர்.

News February 23, 2025

சகி – ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலை

image

சகி- ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலெக்டர் சரவணன் கூறியுள்ளார். மாத ஊதியம் ரூ.10,000 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு <>விண்ணப்பிக்க இங்கு கிளிக் <<>>செய்து வரும் 20.3.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். 

News February 23, 2025

SPயை ஏன் தடுத்தோம்? வழக்கறிஞர் விளக்கம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் வழக்கறிஞர் போராட்டத்தின் போது சமரசம் செய்ய பேச்சு வார்த்தைக்கு அழைத்த பொழுது இரண்டு வழக்கறிஞர்கள்  மட்டுமே அனுமதி என கூறியுள்ளார். ஆதனால் தான் முதன்மை நீதிபதியை சந்திக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்ற பொழுது அவருடன் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என வழக்கறிஞர்கள் தடுத்தோம் என இன்று விளக்கம் அளித்துள்ளனர். 

News February 22, 2025

திண்டுக்கல்லில் இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

image

திண்டுக்கல்லில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், கொடைக்கானல்,வேடசந்தூர், ஒட்டன்சத்திரம்,பழனி, உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News February 22, 2025

பழனியில் இளநீர் வியாபாரி வெட்டிக்கொலை

image

பழனி கொடைக்கானல்ரோடு மாஸ்டர் பேக்கரி அருகே இளநீர் வியாபாரி ஆலமரத்துகுளம் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மகன் ஆரோக்கியசாமி(41) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன், சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் கொலை செய்யப்பட்ட ஆரோக்கியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 22, 2025

திண்டுக்கல்: பணி நியமன ஆணைகள் வழங்கிய அமைச்சர்

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரதில் இன்று மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தனியார் நிறுவனங்களில் சேர உள்ள விண்ணப்பதாரர் 60 பேருக்கு முதல்கட்டமாக அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

News February 22, 2025

அதிக அளவில் பாரம் ஏற்ற வேண்டாம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் பாரம் ஏற்றிச் செல்ல வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 22, 2025

வேலைவாய்ப்பு: திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் அமைந்துள்ள முன்னாள் படை வீரர்கள் ஓய்வு இல்லத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடத்திற்கு தொகுப்பு ஊதிய அடிப்படையில் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் எனவும், மேலும் விவரங்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் தலைமை அலுவலகத்தில் வரும் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

ஒட்டன்சத்திரம்: தொழில் முனைவோருக்கு சிறப்பு பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டின் பாலிடெக்னிக்கில் நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் இன்று புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உற்பத்தி சேவை போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது என மாவட்ட தொழில் மையம் இன்று அறிவித்துள்ளது. தொடர்புக்கு 0451-2904215

error: Content is protected !!