India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல், மங்களப்புள்ளி, லட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோயிலுக்கு 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 09.03.2025 அன்று திருக்குடமுழுக்கு ஆன்மிகப் பெரியோர்கள் (ம) இறையன்பர்கள் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் சென்னை, ஆலந்தூர், விருதுநகர், ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட 23 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி, அலக்குவார்பட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பல லட்சம் வைத்து வெட்டு சீட்டு சூதாட்டம் விளையாடுவதாக இன்று தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்ற போலீசார் அங்கு சூதாடிய 31 பேரை கைது செய்து ரூ .11 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி முருகன் கோவிலில் இன்று காலை திரைப்பட நடிகையும் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக கொள்கை பரப்பு இணைச்செயலாளருமான கௌதமி முருகனை தரிசனம் செய்தனர். உடன் பழனி நிர்வாகிகள், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் இருந்தனர்.
மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் வேலியன்ட் எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்போனியின் அரங்கேற்றத்தை இசைஞானி இளையராஜா நிகழ்த்த உள்ளார். இதனால் இன்று இசைஞானி இளையராஜாவிற்கு திண்டுக்கல், பாதாள செம்பு முருகன் கோவில் சார்பாக வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஊராளிப்பட்டியில் சரபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவபெருமான் வேண்டுவோர்களுக்கு வேண்டும் வரம் அளிக்கும் இறைவனாக உள்ளார். இந்த ஆலயத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கும்ப குரு மணி மற்றும் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் வந்தனர். இவர்கள் இந்த ஆலயத்தில் அமர்ந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்பு உலக நன்மை மற்றும் மக்களின் நலன் வேண்டி சிறப்பு யாகத்தில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல், பேரிஜம் ஏரிக்கு செல்லும் மலைப்பாதையில் மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு, தொப்பி தூக்கி பாறை, பேரிஜம் ஏரி வியூ ஆகிய சுற்றுலா இடங்கள் உள்ளன. இதனை பார்வையிடுவதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ‘உங்களது அனைத்து வகையான Password மற்றும் OTP யை யாரிடமும் பகிர வேண்டாம் என்ற வாசகத்தை பதிவினை பதிவிட்டு விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம், நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நலவாழ்வு மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு <
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம் திண்டுக்கல் நகர் ஒட்டன்சத்திரம் பழனி நிலக்கோட்டை கொடைக்கானல் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.