India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்: திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ‘குழந்தை திருமணத்தை தடுப்போம். குழந்தைகளின் எதிர்காலத்தை காப்போம்.’ என்ற வாசகத்தை பதிவினை பதிவிட்டு விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை முதல்வர் நிருபித்துக் காட்டியுள்ளார். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சோஷியலஷத்தை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்” என்றார்.
திண்டுக்கல் பாரதிபுரத்தல் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அப்பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் (10.03.2025) அன்று நடைபெறவுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்யப்பட்ட நபர் லோடுமேன் என்றும் கொலை செய்த நபர் ரவி கட்டிட தொழிலாளி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.<
திண்டுக்கல், மங்களப்புள்ளி, லட்சுமி நரசிங்கப்பெருமாள் திருக்கோயிலுக்கு 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 09.03.2025 அன்று திருக்குடமுழுக்கு ஆன்மிகப் பெரியோர்கள் (ம) இறையன்பர்கள் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் சென்னை, ஆலந்தூர், விருதுநகர், ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட 23 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி, அலக்குவார்பட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பல லட்சம் வைத்து வெட்டு சீட்டு சூதாட்டம் விளையாடுவதாக இன்று தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்ற போலீசார் அங்கு சூதாடிய 31 பேரை கைது செய்து ரூ .11 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.