India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை (07.05.2024) முதல் 30.09.2024 வரை அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு போன் செய்தால் பூஜைகள் நடைபெறும் நேரம், தங்கும் அறைகள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், வின்ச் மற்றும் ரோப் கார்கள் கட்டண விவரங்கள், பூஜைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இதற்காக கட்டணமில்லாத 1800 425 9925 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திருப்பதி கோயிலுக்கு திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்திலிருந்து கலப்பட நெய் அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்ஜாமின் கோரி ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர், திருப்பதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணியில் இருந்து இன்று காலை 8:30 வரை பெய்த மழை அளவு, திண்டுக்கல் (RDO அலுவலகம்) 0.00, காமாட்சிபுரம் 0.00, நத்தம் 0.50, நிலக்கோட்டை 0.00, சத்திரப்பட்டி 18.00,
வேடசந்தூர் (தாலுகா அலுவலகம்) 0.00, வேடசந்தூர் (புகையிலை நிலையம்) 0.00, பழனி 4.00, கொடைக்கானல் ரோஜா தோட்டம் 26.00, பிரையண்ட் பூங்கா 46.80, மொத்தம் 95.30 மழை அளவும், சராசரி 9.53 மழை பெய்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டிய 34 கடைகளின் ஏலம் நடைபெற்றதில் முறைகேடுகள் குறித்து, திண்டுக்கல் மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் தொடுத்த வழக்கின் தீர்ப்பினை 30.09.2024 திங்கட்கிழமை இன்று காலை 11:00 மணிக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் தீர்ப்பு கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழையால் 15 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனையடுத்து நேற்று வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் காட்டாற்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். வீடுகளை இழந்தவர்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை..
திண்டுக்கல்: தாடிக்கொம்பு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உலகம்பட்டி, வடக்கியூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய சார்லஸ், கோபாலகிருஷ்ணன், வடிவேல், சரவணகுமார், அருண்குமார், முருகேசன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தீயணைப்புத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் வெள்ளப்பெருக்கின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்வில் தாசில்தார் சஞ்சய், தீயணைப்பு நிலை அதிகாரி காளிதாஸ் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுக்கடைகள் 2-ம் தேதி (புதன்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ள பாலாஜிபவன், எதிர்புறம் பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நேற்று சுமார் 6க்கும் மேற்பட்ட ஒரு மர்ம கும்பல் சம்சுதீன் மகன் முகமது இர்பான் (27) என்பவர் தலையை வெட்டி சிதைத்து கொடூரமாக கொலை செய்தனர். இதை தடுக்க வந்த அப்துல்லாஹ் என்பவருக்கும் தலையில் வெட்டப்பட்டு காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதை நகர் வடக்கு போலீசார் தீவிர விசாரணை செய்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.