Dindigul

News October 2, 2024

பாதாள செம்பு முருகனை தரிசித்த நடிகர்

image

பிரபல திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகராவார். இவர் இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் பாதாள செம்பு முருகன் கோவிலில் அமைந்துள்ள காவல் தெய்வமான சங்கிலி கருப்பை வணங்கினார். பின்னர் பாதாள செம்பு முருகனுக்கு கருங்காலி மாலை அணிவித்து தரிசித்தார்.

News October 2, 2024

குட்கா கடத்திய சகோதரர்கள் உட்பட 3 கைது

image

திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்தால் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 306 கிலோ குட்கா இருந்தது. இதை எடுத்து காரில் இருந்த சகோதரர்கள் காளிராஜன் (31), கவாஸ்கர் (28) மற்றும் மகேந்திரன் (30) ஆகிய மூன்று பேரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

News October 2, 2024

ரூ.1 லட்சம் மின் கட்டணம்: அதிர்ந்த விவசாயி

image

மேல்மலை பழம்புத்தூர் கிராமத்தில் உள்ள சந்திரசேகர் என்ற விவசாயிக்கு நேற்று ரூ.1,01,580 மின்கட்டணம் என மின் வாரியத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது, தவறு நடந்துள்ளதாக கூறிய அதிகாரிகள், உடனடியாக சரி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

News October 1, 2024

பழனி கோயில் நிர்வாகம் தகவல்

image

12ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம். நடைபெறும் எனும் நிலையில் கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பதுமைகள் மற்றும் சிற்பங்கள் சேதமடைவது இயல்பானது. பழனி கோவிலில் உள்ள குரங்குகள் கோவில் கோபுரங்களில் ஏறி அதில் உள்ள சிற்பங்கள் மற்றும் பதுமைகளை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.பழனி ராஜ கோபுரத்தில் சேதமடைந்த பகுதியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் தகவல் அளித்தது.

News October 1, 2024

கூத்தம்பட்டி சொத்து பிரச்சனை ஒருவர் அடித்துக் கொலை

image

கூத்தம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி தர்மராஜ் 50. இவருக்கும் சகோதரர் வெள்ளைச்சாமி 46, இடையே சொத்து பாகப்பிரிவினை நடந்தது. நேற்று தோட்டத்து சாலையில் இருந்த தகர கூரையை எடுக்க சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி தள்ளுமுள்ளு ஏற்பட வெள்ளைச்சாமி ஆதரவாளர்களுடன் சேர்ந்து தர்மராஜை தென்னை மட்டைகளால் தாக்கினார். மயங்கிய தர்மராஜ் உயிரிழந்தார் செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 1, 2024

கொடைக்கானல் செல்ல இ-பாஸ் முறை தொடரும்

image

சென்னை உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறும் நடைமுறை தொடரும் என திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பாஸ் (Local ePass) பெறுவது தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்ணில் 0451-2900233, 9442255737 அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News October 1, 2024

திண்டுக்கல் மகளிர் சுய உதவி குழுவுக்கு விருது

image

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த மகளிர் சுய உதவி குழுவாக, திண்டுக்கல் ஆர்.வி நகர் கற்பகம், ஜெனிபர் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அந்த குழுவினருக்கு விருது வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News October 1, 2024

நீதிமன்றத்தில் பதற்றம்: உஷார் நிலையில் போலீஸ்

image

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் திமுக நிர்வாகி கொலை வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து இன்று குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வரும் போது, அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

News September 30, 2024

கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு

image

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை (07.05.2024) முதல் 30.09.2024 வரை அமல்படுத்தப்பட்டு தற்போது  வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

பழனி பக்தர்களுக்கு புதிய சேவை

image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு போன் செய்தால் பூஜைகள் நடைபெறும் நேரம், தங்கும் அறைகள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், வின்ச் மற்றும் ரோப் கார்கள் கட்டண விவரங்கள், பூஜைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இதற்காக கட்டணமில்லாத 1800 425 9925 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.