India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை, மதிப்பீடுகள், வரைபடம், வடிவமைப்புகள் தயாரிக்க கலந்தாலோசகரை நியமிக்க ரூ.60 ஆயிரத்துக்கு ஒப்பந்தப்புள்ளி அளிக்கப்பட்டுள்ளது. வத்தலகுண்டு-பழனி புறவழிச் சாலைகளுக்கு இடையே புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். இதற்காக 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன், பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளதோ அவர்கள் யாராக இருந்தாலும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்”என திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் பேசியுள்ளார் .
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழனியில் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பான அனைத்து துறை அரசு அலுவலக ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பழனி ஆண்டவர் கல்லூரி வளாகத்தில் வருகிற 24-ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி பிளாஸ்டிக் பைகள், பொருட்களை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அம்பாத்துரை ரயில் நிலையத்தில் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்தபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மாற்று இஞ்சின் அனுப்பி வைக்கப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக திண்டுக்கல்லை வந்தடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள வண்டி கருப்பண்ணசாமி கோவில் அருகே நேற்று நள்ளிரவில் இருசக்கர வாகனம் மீது அவ்வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த வடமதுரை காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கேரளாவில் மழை பெய்து வருவதால் திண்டுக்கல்லுக்கு காலை 8 மணிக்கு வரவேண்டிய திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு வந்தது காலை 9 மணிக்கு வரவேண்டிய பாலக்காடு திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11 மணிக்கு வந்தது. இதனால் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பயணிகள் அவதியடைந்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் முறையான அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காய்ச்சல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெரியசாமி நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக முன்னாள் மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரம்பியல் பிரச்சினை காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டிஎன்பிஎல் 2024 சீசனில் ப்ளேஆஃஸ் சுற்றுக்கு கோவை, திருப்பூர், சேப்பாக், திண்டுக்கல் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளது. இதில் இன்று (ஜூலை-31) எலிமினேட்டர் போட்டி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் என்பிஆர் கல்லூரியில் இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கலில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.