Dindigul

News January 9, 2026

திண்டுக்கல்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பத 2. Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 9, 2026

திண்டுக்கல்: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

image

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 9, 2026

திண்டுக்கல்: IOCL-லில் 394 பணியிடங்கள்!

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாகவுள்ள 394 Junior Engineering Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Diploma, Engineering,B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ. 25,000 முதல் ரூ. 1,05,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். https://iocl.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

திண்டுக்கல் பிரபலம் காலமானார்!

image

சத்திரப்பட்டியைச் சேர்ந்த முதுபெரும் காந்தியவாதி மா. வன்னிக்காளை (வயது 90+) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். காந்தியக் கொள்கைகளைப் பரப்பி வந்த இவரது சேவையைப் பாராட்டி கடந்த 2024-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு ‘சிறந்த காந்தியவாதி’ விருது வழங்கி கௌரவித்தது. அவரது மறைவையொட்டி, சத்திரப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News January 9, 2026

திண்டுக்கல்: தொழிலாளி ஆற்றில் மூழ்கி மரணம்!

image

சோழவந்தானைச் சேர்ந்த தொழிலாளி செல்லப்பாண்டி (35). குடும்பத் தகராறு காரணமாக மனைவியிடம் கோபித்துக்கொண்டு, தனது இரண்டு மகன்களுடன் திண்டுக்கல் குண்டலபட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், அணைப்பட்டி அருகே உள்ள முல்லைப் பெரியாறு வாய்க்காலில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

திண்டுக்கல்லில் இனி அலைய வேண்டாம்!

image

திண்டுக்கல் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

அறிவித்தார் திண்டுக்கல் ஆட்சியர்!

image

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in /  https://cmyouthfestival.sdat.in –இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் விவரங்களை பதிவு செய்திட வேண்டும். ஜன-7 முதல்  21-க்குள் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தகவல்.

News January 9, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.08) லோன் ஆப் மூலம் கடன் வாங்காதீங்க… அப்பறம் அவஸ்தப்படுவீங்க… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!