India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.08) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: கன்னிவாடியில் உள்ள சோமலிங்க சுவாமிக்கு பல்வேறு புராணச் சிறப்புகள் உண்டு. பூர்வ ஜென்மத்தில் ஒருவர் செய்த பாவங்களால் ஏற்பட்ட தோஷம் இந்தக் கோவிலில் வழிபட்டால் தீரும் என்பதும் நம்பிக்கை. இந்த மலைக்கோவிலில் தியானம் செய்தால் மனசாந்தி கிட்டும் எனப் பலர் இங்கு தியானம் செய்வதும் உண்டு. இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspdgldvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0451-2461828 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <

மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும்இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

திண்டுக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள்<

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (70). இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை, திருடிச் சென்றனர். இதனையடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் RVS நகரைச் சேர்ந்த வினோத் (28) மற்றும் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த அஸ்கர் மீரான் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து
ஆட்டை மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இருளகுடும்பன்பட்டியைச் சேர்ந்தவர் வஞ்சம்மாள் (67).இவர் நேற்று ஒட்டன்சத்திரம் மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள தாராபுரம் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரம் நோக்கி அதிவேகமாகச் சென்ற மினி லாரி எதிர்பாராதவிதமாக வஞ்சம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வஞ்சம்மாள், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்/

திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் முருகன் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பழனி ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திண்டுக்கல் மக்களே பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.