India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க.
1.<
2.உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க.
உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

கொடைக்கானலை குறிஞ்சிநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பரமேஷ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பரமேஷ்வரியின் மகன் மனோஜ்குமார் (23)கண்டித்துள்ளர். மேலும் இருவருக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டு மனோஜ்குமார் கோபாலகிருஷ்ணணை இரும்பு கம்பியால் தாக்கியதால் இறந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை முடித்து விட்டு மதுரை திரும்பியபோது, திருமங்கலம் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தது. திருமங்கலம் அருகே நடைபெற்ற இந்த விபத்தல் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

1)திண்டுக்கல்லில் ரூ.14கோடியில் அடிப்படை வசதிகள்.
2)மாநகராட்சியில் ரூ.8கோடியில் பாதாள சாக்கடை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
3)இடும்பன் குளம், சண்முகா நதி சீரமைக்கப்படும்
4)நத்தம் கலைகல்லூரிக்கு புதிய கட்டிடம்
5)ஒட்டன்சத்திரத்தில் முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை.
6)கொடையில் 100 ஏக்கரில் சுற்றுலா முதலீட்டு பூங்கா
7)பழனி கோயில் சீரமைக்கப்படும்
8)ஒட்டன்சத்திரத்தில் புதிய கழிவுநீர் கால்வாய்

திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திண்டுக்கல்லில் மட்டும் 1.02 லட்சம் பேருக்குப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றது. மேலும், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 10,000 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என்றும் சுமார் 4 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம்.இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார்,வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து,அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும்.SHARE பண்ணுங்க

வேடசந்துார்: நரசிங்கபுரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் குடகனாறு அணைக்கு வர வேண்டிய தண்ணீர் திசைமாறிச் செல்கிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாகப் பாதிப்படைந்துள்ள விவசாயிகள், நீரை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக 2020-ல் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை இன்னும் வெளியாகாததால் வேதனை. தமிழக முதல்வர் இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்

தமிழக முதல்வர் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிஹரன், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேற்று (ஜனவரி 6) இரவு முதலே போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் கண்டனம்!
Sorry, no posts matched your criteria.