Dindigul

News August 2, 2024

திண்டுக்கல் மாநகராட்சி நிதி கையாடல் ஒருவர் சஸ்பெண்ட்

image

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில் ரூபாய் 4.66- கோடி ரூபாய் கையாடல் செய்ததை தொடர்ந்து இளநிலை உதவியாளா்கள் சரவணன், சதீஷ், கண்காணிப்பாளர் சாந்தி ஆகிய மூவரை மாநகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் இன்று மாநகராட்சி நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

News August 2, 2024

திண்டுக்கல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

image

வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மலை கிராம மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், குமரி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மழைநாட்ளில் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News August 2, 2024

தேசிய மகளிர் கால்பந்து போட்டி வழியனுப்பு விழா

image

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பாக தேசிய அளவிலான கால்பந்து போட்டி ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நாளை தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு செய்யப்பட்டு வழி அனுப்பு விழா இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இதில் நிர்வாக குழு தலைவர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 2, 2024

பழனியில் 500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒருவர் பலி

image

தாராபுரத்தை சேர்ந்த செந்தில் மற்றும் நந்து ஆகியோர் நேற்று மாலை கொடைக்கானல் சென்றுவிட்டு தாராபுரம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் சாலை ஏழாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்துகொண்டிருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செந்தில் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

News August 2, 2024

பழனியில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

image

பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள 7வது கொண்டை ஊசி வளைவில் இன்று (ஆக.2) சென்றுகொண்டிருந்த வேன் கட்டுப்பாட்டை இழந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். தகவலின்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அடிவாரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

News August 2, 2024

திண்டுக்கல்லில் தாய்ப்பால் வார விழா

image

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு குழந்தைகள் நல சிகிச்சை தலைமை மருத்துவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மேலும், தலைமை மருத்துவர் குணா முன்னிலை வகித்தார். இதில், தாய்ப்பாலின் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். இந்த விழாவில் மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 2, 2024

திண்டுக்கல்: பிளஸ்-2 மாணவர்களுக்கு சான்றிதழ்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 19 ஆயிரத்து 9 மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில்‌, 18 ஆயிரத்து 134 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கு வசதியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்து அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுச் சென்றனர்.

News August 2, 2024

வத்தலக்குண்டு ஆலமரத்திற்கு கும்பாபிஷேகம்

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் மிகப் பழமையான ஆலமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஓடை முனியாண்டி கோயிலும் உள்ளது. இந்த ஆலமரத்திற்கு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்று யாக வேள்விகள் தொடங்கப்பட்டு புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆலமரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

News August 2, 2024

கன்னிவாடியை சேர்ந்தவர் ரயில் மோதி பலி

image

திண்டுக்கல் மாவட்டம் ஒத்தக்கண்பாலம் பகுதியில் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்ற கன்னிவாடி பகுதியை சேர்ந்த ரவி(49) என்பவர் மீது மதுரை-திண்டுக்கல் பயணிகள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News August 1, 2024

கடன் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்டங்களை செயல்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதற்காக மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் காந்திநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி இருந்தனர்.

error: Content is protected !!