Dindigul

News August 7, 2024

திண்டுக்கல்: பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் தலைமையில் இன்று (07.08.2024) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

News August 7, 2024

திண்டுக்கல்: செபஸ்தியார் ஆலயத்தில் அன்னதானம்

image

திண்டுக்கல் அருகே உள்ள முத்தழகுபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆக. 4ஆம் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான நேற்று பக்தர்கள் சுமார் 2000 ஆடுகள், 5000 கோழிகளை காணிக்கையாக வழங்கினர். டன் கணக்கிலான காய்கறிகள், மலை மலையாய் குவிக்கப்பட்ட சாதத்துடன் இந்த ஆடு, கோழி இறைச்சி ஒன்றாக சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நேற்றிரவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

News August 7, 2024

திண்டுக்கல்லில் திமுகவினர் புகழஞ்சலி

image

திண்டுக்கல் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று திண்டுக்கல் கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருவருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பழனி எம்எல்ஏ செந்தில்குமார் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

News August 7, 2024

திண்டுக்கல்: இலவச அழகு கலை பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின் சாலை சிறுமலை பிரிவு அருகில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச அழகு கலை பயிற்சிக்கான அட்மிஷன் இன்று முதல் நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரில் வந்து முன்பதிவு செய்யவும். பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியானது 1 மாத காலம் நடைபெறும்.

News August 7, 2024

திண்டுக்கல்: மாநில அளவில் ஹாக்கி அணி தேர்வுக்கு அழைப்பு

image

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் மாநில அளவிலான சப் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ராணிப்பேட்டையில் ஆக.15 முதல் ஆக.18 வரை 3 நாட்கள் நடக்கிறது. இதற்கான திண்டுக்கல் மாவட்ட அணி தேர்வு ஆக.11 காலை திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. 2008 ஜனவரி 1க்கு பிறகு பிறந்த ஹாக்கி வீரர்கள் பங்கேற்று கொள்ளலாம். 7871468551 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் ராமானுஜம் தெரிவித்தார்.

News August 7, 2024

திண்டுக்கல்லில் 14 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் விண்ணப்பித்த 14 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வந்துள்ளது. ஸ்கேன் செய்து கணினி மற்றும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு சில நாட்களில் அடையாள அட்டை கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 6, 2024

திண்டுக்கல் நூலகத்தில் அமைச்சர் ஆய்வு

image

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சுகாதார வளாகம், புதிதாக கட்டப்பட்டுள்ள வாசகர் அரங்கம் போன்றவற்றை பார்வையிட்டு வாசகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, புதிய அரங்கத்தை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், நூலகத்தின் மாடியில் உள்ள பயன்பாடற்ற பொருட்களை உடனே அகற்றுமாறும் அறிவுறுத்தினார்.

News August 6, 2024

திண்டுக்கல்: பாலியல் வழக்கில் 24 ஆண்டு சிறை

image

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலக்கோட்டை ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் (28) என்பவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று ராம்குமாருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5000/- அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News August 6, 2024

திண்டுக்கல்லில் பசுக்களுக்கு தடுப்பூசி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 மாதங்களுக்கு மேல் வயதுடைய அனைத்து பசுக்களுக்கும் தோல் கழலை நோய் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, அனைத்து கால்நடை வளர்ப்போர்களும், தங்களது பசுக்களுக்கு தவறாமல் இத்தடுப்பூசியினை செலுத்தி, கால்நடைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மலையிட பகுதியில் வரன்முறை செய்யப்படாத, அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!