India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை திரட்டும் விதமாக நேற்று திண்டுக்கல்லில் உள்ள முஜிப் பிரியாணி ஹோட்டலில் மொய் விருந்து நடைபெற்றது. இதையடுத்து இந்த மொய் விருந்தில் வந்த தொகை இன்று எண்ணப்பட்டது. அப்போது மொத்தம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 74 ரூபாய் இருந்ததாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 25.08.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “போதையில்லா தமிழ்நாடு” என்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், உதவி ஆணையர்(கலால்) பால்பாண்டி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேனியை சேர்ந்தவர் 25 வயது பெண். திருமணமாகி பிரிந்து வாழ்கிறார். திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடன் முகநுாலில் திண்டுக்கலை சேர்ந்த டிரைவர் கோபி32, திருமணமானதை மறைத்து பழகினார். இந்நிலையில் அப்பெண் திருமணம் செய்ய வலியுறுத்தியதால் கோபி பேசுவதை தவிர்த்தார். இதையடுத்து அப்பெண் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்து 4 மணி நேரத்தில் கோபியை கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பூதமலை அருகில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவல்படி ஒட்டன்சத்திரம் வனச்சரகர் ராஜா வனவர் இளங்கோவன் தலைமையில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மர நாய்களை சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்த கொடைக்கானல் கருவேலம்பட்டி செல்லப்பாண்டி 30, கணேசன் 37, மருதபாண்டியன் 28, கோபாலகிருஷ்ணன் 41, கோம்பைப்பட்டி நாட்ராயன் 40, புதுார் நாகமாணிக்கம் 28, மனோகரன் 32, ஆகியோரை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி, நெய்க்காரம்பட்டி, வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் தக்காளி பயிரிடப்பட்டு விவசாயிகள் தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் கிலோ ரூ.100-க்கு விற்பனையான நிலையில், கடந்த சில தினங்களாக தக்காளி விலை கிலோ ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. கொடைக்கானல் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் கனமழை பெய்தது. மேலும், நேற்றும் பரவலாக மழை பெய்ததில் மாவட்டம் முழுவதும் 66.70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கொடைக்கானல் ரோஸ் கார்டன் 31.1, பையன் பூங்கா 15, நிலக்கோட்டை 10.20, காமாட்சிபுரம் 1.50, நத்தம் 4.50, வேடசந்தூர் 1.80 மி.மீ மழை பதிவானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் 1.8.2024 முதல் 31.1.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் 34 புதிய கடைகள் ஏலம் விடப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக 14-வது வார்டு கவுன்சிலர் தனபாலன், மதுரை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 34 கடைகளை அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது . இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நிலையில், நீதிபதிகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்காக ஒத்தி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.