India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 235 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.4100 – 24200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
மூஞ்சிக்கல்லில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லத்தில் காலியாக Watchman பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாத ஊதியமாக ரூ. 10,000/- வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 25 ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒட்டன்சத்திரத்தில் கொலை வழக்கில் கைதான சூர்யா(26) , சிறுமி பாலியல் வழக்கில் கைதான வினித் குமார்(24), ஆபாச வீடியோ வழக்கில் கைதான செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து 3 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கண்ணாபட்டி அருகே பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக விஸ்வநாதர் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.
பழநி வழியே தாம்பரம் – போத்தனூர் இடையே வாரந்திர சிறப்பு ரயில் இன்று(ஏப்.11) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்.11 முதல் மே.2 வரை 4 வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் கிளம்பி பழனிக்கு காலை 5 மணிக்கு வந்து 7.35 க்கு போத்தனூர் சேரும். மறுமார்க்கத்தில், 4 ஞாயிற்றுகிழமைகளில் இரவு12 மணிக்கு போத்தனூரில் கிளம்பி பழனிக்கு 1.50க்கு வந்து மறுநாள் மதியம் 12.15 க்கு தாம்பரம் போய் சேரும்.
திண்டுக்கல் மாவட்ட தனி மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் திட்ட அலுவலர்கள் தலைமையில் (12.04.2025 ) அன்று காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை நடைபெறும். பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ரேஷன் கார்டு சம்மந்தமான தங்கள் கோரிக்கைகளை மனுகளாக வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் ,மிக பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர்களின் கூட்டமைப்பு நடத்தும் இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான பரிசு தொகையுடன் கூடிய ஆன்லைன் தேர்வு வருகிற மே11ந்தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க www.obcrights.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 14தேதி ஆகும். மாணவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
திண்டுக்கல், ராமலிங்கம்பட்டி அருகே அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோயில், பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ள கருவறையில் முருகனை தரிசிக்கக் கூடிய சிறப்பு வாய்ந்த கோயிலாகும். இங்கு முருகனை தரிசிப்பதன் மூலம் தீராத கஷ்டம், தடைகள், குடும்பத்தில் சண்டை,கடன் சுமை போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற www.sdat.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைப்பேசி வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.