India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்: ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள காளியம்மன் கோயிலின் 10 பவுன் நகையை பூசாரி முருகன் மற்றும் அவரது மகன்கள் மணி, முத்துப்பாண்டி ஆகியோர் கையாடல் செய்து தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூசாரியை எதிர்த்து ஊர் மக்கள் கோயிலை முற்றுகையிட்டனர். இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை இமயமலையின் ஒரு பகுதி என ஒரு நம்பிக்கை உண்டு. இந்தப் பகுதியில் மிக உயரமான மலை என்றால் அது வெள்ளி மலை தான். இந்த மலையின் உச்சியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தைக் காண அரைமணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி நடந்து சென்றால் கைலாயத்தையே கண்ட ஒரு அனுபவம் உங்களுக்கு கிட்டும். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
தருமத்துப்பட்டி-பன்றிமலை சாலையில் அமைதிச்சோலை அருகே 60 அடி ஆழத்தில் ஆதிமூலம் நீரோடை உள்ளது. இங்கு நேற்று மாலை கால்நடை மேய்ச்சலுக்குச் சென்ற சிலர், ஒரு உடல் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார் பாதி எரிந்த நிலையில் இருந்த ஒரு பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் : சாணார்பட்டி ஒன்றியம் அஞ்சுகுளிபட்டி அருகே உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்ற சோழகுளத்துபட்டியைச் சேர்ந்த பேபிஸ்ரீ (17), நாகசக்தி (12) ஆகிய 2 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாணார்பட்டி காவல்துறையினர் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் போன்ற பல சிறப்பு மிக்க முருகன் கோயில்கள் உள்ளன. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். மேலும் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் சார்பில் அம்பேத்காரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (ஏப்-14)புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நியூசெஞ்சுரிபுத்தக நிலையம், வடமதுரை அரசு பள்ளி அருகே, வேடசந்தூர் சிலை அருகே பழநி குமுதம் புக் சென்டர், நத்தம் கே.எஸ்.எஸ்.எம் காம்ப்ளக்ஸ் கலைஞர் நுாலக நூலக உள்ளிட்ட பகுதிகளில் புத்தக கண்காட்சி நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில்“முதலமைச்சரின் “முதலமைச்சரின் மறுகட்டுமானத் திட்டம்” புதிய திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் வட்டார அலுவலகத்தில் நேரடியாக அல்லது ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) என்ற பெயரில் அஞ்சல் மூலமோ 25.04.2025 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்.
ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி ஏ.பி. காலனியை சேர்ந்த மோகன்ராஜ் மனைவி சரோஜாவும் (43), மகள் கீர்த்தனாவும் (9), காமாட்சி அம்மன் கோயில் முன்பு நேற்று முன் தினம் இரவு நடந்து சென்றனர். அப்போது சிவகங்கையை நோக்கி சென்ற கார் நடந்து சென்ற சரோஜா மற்றும் கீர்த்தனா ஆகிய இருவர் மீதும் மோதியது. இதில் தாய் சரோஜா உயிரிழந்தார், கீர்த்தனா சிகிச்சையில் உள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
திண்டுக்கல்: மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பத்மகிரீஸ்வரர் கோயில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் பத்மகிரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். இந்தக் கோயிலில் வந்து வழிபட்டால் ராகு, கேது தோஷம் நீங்கி, திருமணத் தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.