India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளான 18 ஆம் தேதி மற்றும் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களை வெளியிட மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு குழுவிடம் முறையான முன் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 70% காய்கறிகள் கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை என்பதால் கேரள வியாபாரிகள் சந்தைக்கு அதிகம் வராததால் காய்கறி விலை சரிந்தது. கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி 18 ரூபாய்க்கும், கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் 75 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்பட்டது.
நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி ஒடுகம்பட்டியில் கலியபெருமாள் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. இதில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பாரம்பரிய தேவராட்டம் ஆடியும், புலி வேஷம் போட்டு வேட்டையாடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் கும்மி அடித்தல், மாறு வேஷம் அணிதல், கோலாட்டம், மஞ்சள் நீர் ஊற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
பழனி வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் அமைச்சர் பெரியசாமி தலைமையில் இன்று முதல்வரை சந்தித்தனர். ரயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும், பழனி கொடைக்கானல் ரோப் கார் திட்டம் செயல்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர். வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திண்டுக்கல்- திருச்சி வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இன்று பெண் மயில் ஒன்று இறந்தது. மயிலின் உடலை வனத்துறையிடம் ரயில்வே காவலர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து திண்டுக்கல் அருகில் ரயிலில் மயில்கள் அடிபட்டு இறப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். அவர், தொகுதி முழுமைக்கும் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அவரை ஊருக்குள் வரக்கூடாது எனக் கூறி இஸ்லாமியர்கள் இன்று கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக வேட்பாளர் திலகபாமாவிற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத், “தேர்தலில் வெற்றி பெற்றால் திலகபாமா நிச்சயம் மத்திய அமைச்சர் ஆவது உறுதி; இதனால் அவரை தோற்கடித்தே தீர வேண்டும் எனக் திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு வருகிறது” என தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் வில்சன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் பைபாஸ் பகுதியில் உள்ள தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வெங்காய பேட்டையில் இன்று சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில் தரம் பிரித்தல் வேலைக்கு வரவேண்டாம் என்று நிர்வாகிகள் கூறியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோடை வெயில் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைந்ததாலும் பண்டிகைக் காலம் என்பதாலும் பூக்களின் தேவை அதிகளவில் இருந்ததால் பூக்கள் விலை 2 மடங்கு உயர்ந்து விற்பனையானது. 1 கிலோ ரோஸ் ரூ.140, சம்பங்கி ரூ.150, செண்டுமல்லி ரூ.80, கோழி கொண்டை ரூ.70, வாடாமல்லி ரூ.50, மல்லிகை ரூ.600, கனகாம்பரம் ரூ.600, முல்லை ரூ.600, ஜாதி பூ ரூ.500க்கு விற்பனையானது.
Sorry, no posts matched your criteria.