Dindigul

News January 31, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஜனவரி 30 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

திண்டுக்கல்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 30, 2026

திண்டுக்கல்: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

திண்டுக்கல்: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

image

திண்டுக்கல் மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.48,480 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக்க கடைசி தேதி 18.02.2026. வங்கி வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க

News January 30, 2026

நிலக்கோட்டை அருகே போஸ்டரால் பரபரப்பு

image

நிலக்கோட்டை அடுத்த மல்லணம்பட்டி ஊராட்சியில், அடிப்படை வசதிகள் கோரி 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், தங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப் போவதாக மல்லணம்பட்டி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

News January 30, 2026

திண்டுக்கல்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News January 30, 2026

ஆத்தூர்: ரூ.10 லட்சம் வழங்கிய அமைச்சர்

image

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வனப்பகுதி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக காட்டுமாடு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி, முருகனின் மனைவி ராக்கம்மாளிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

News January 30, 2026

திண்டுக்கல்: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 30, 2026

பழனி போறீங்களா?

image

பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்கள் எளிதாக வழி கண்டறிய, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் புதிய QR கோடு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் செல்போன் மூலம் இந்த QR கோடை ஸ்கேன் செய்தால், அவர்கள் செல்ல வேண்டிய பாதைகள், குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கான வழிகாட்டி வரைபடம் (Map) உடனடியாகத் திரையில் தோன்றும். (ஷேர் பண்ணுங்க)

News January 30, 2026

திண்டுக்கல் அருகே கொலை.. அதிரடி தீர்ப்பு

image

கடந்த 2019-ம் ஆண்டு வடமதுரை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் நிலத் தகராறு காரணமாக மணிகண்டன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து திருப்பதி, சவடமுத்து, முனீஸ்வரன் மற்றும் புகழேந்தி ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

error: Content is protected !!