Dindigul

News January 27, 2026

திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திண்டுக்கல்லில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News January 27, 2026

கொடைக்கானல்: பள்ளி மாணவி தற்கொலை

image

கொடைக்கானல் அருகேயுள்ள தனியாா்பள்ளியில் கேரளத்தைச் சோ்ந்த மாணவி கீா்த்தனா 9-ம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், அவா் மன உளைச்சலில் இருந்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை காலை கீா்த்தனா தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பாா்த்த விடுதி காவலா் உள்ளிட்டோா் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 27, 2026

திண்டுக்கல்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

1) நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2) குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3) 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4) 100 சதவித முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் இலவசம்
5)<> newscheme.tahdco.com <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6) மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.
(SHARE)

News January 27, 2026

திண்டுக்கல்: பிறப்பு, இறப்பு சான்று வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

News January 27, 2026

திண்டுக்கல்: 12th போதும்.. சூப்பர்வைசர் வேலை!

image

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>பண்ணுங்க.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 27, 2026

வடமதுரை அருகே கொள்ளை

image

வடமதுரை, தென்னம்பட்டி சாலையோரத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவில் உடைத்து உள்ளே இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். உண்டியலில் ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் பணம் இருந்திருக்கலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 27, 2026

திண்டுக்கல்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். ( SHARE பண்ணுங்க)

News January 27, 2026

திண்டுக்கல்லில் 3 பேர் அதிரடி கைது

image

திண்டுக்கல், பாலமரத்துப்பட்டியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது மகள்கள் பஞ்சவர்ணம், கருத்தம்மாள் ஆகிய மூவரையும், கடந்த 24-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே ஊரைச் சேர்ந்த விஜய், ஆறுமுகம், முருகேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மணிராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.

News January 27, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று (ஜனவரி 26) இரவு 10 மணி முதல் இன்று 27-ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர நிலை ஏற்பட்டால், உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொலைபேசி மூலம் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

News January 27, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று (ஜனவரி 26) இரவு 10 மணி முதல் இன்று 27-ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர நிலை ஏற்பட்டால், உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொலைபேசி மூலம் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!