India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல், சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக சுகாதாரத் துறையில் பணிபுரியும் பேராசிரியர் ரங்கநாதன் என்பவர் மாணவர்களை தவறாக வழி நடத்திய புகாரில் அவர் மீது இன்று கல்லூரி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவரை ஆறு மாத விருப்ப ஓய்வு எடுக்க வேண்டுமென கல்லூரியின் துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் விவசாயிகள் நெல் –II, மக்காச்சோளம் – III, சோளம், நிலக்கடலை மற்றும் பருத்தி – III பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட தோமையார்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் அம்மா(40). இந்நிலையில் இன்று காலை 8:30 மணி அளவில் வாகனம் மோதி நாகூர் அம்மா என்பவர் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
வேடசந்துரை அடுத்த அழகாபுரி கொடகனாறு அணையின் மொத்த நீர்மட்டம் 27 அடி. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழையால் கொடகனாற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 25.56 அடியாக கூடியது. அணைக்கு 160 கனஅடி நீர்வரத்து. அணையின் நீர்மட்டம் 26 அடியாக அதிகரிக்கும் பட்சத்தில், பின் நீர் திறந்து விடப்படும். இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வேடசந்தூர் வட்டம், அழகாபுரி கிராமம், குடகனாறு அணையில் 17.11.2024 அன்று மாலை 7.00மணியளவில் 25-56 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடகனாறு அணையில் 26.00 அடியாக அதிகரிக்கும் பட்சத்தில் மேற்கொண்டு வரும் நீரை உபரிநீராக குடகனாற்றில் திறந்து விடப்படும் என அழகாபுரி நீவது., குடகனாறு அணைப்பிரிவு, உதவிப்பொறியாளர், மகேஷ்வரன், தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (17.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
1. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்க்களர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2. திண்டுக்கல்லில் இட்லி பொடியில் கரப்பான் பூச்சி
3. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.
4. திண்டுக்கல் மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா
5. திண்டுக்கல்லில் சீட்டு விளையாடிய 6 பேர் கைது
6. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் கொடியேற்றம்
திண்டுக்கல்லில் வாக்காளர் சிறப்பு முகாம் 2ம் நாள் நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுசாவடிகளில் இன்று சிறப்பு முகாம்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
1.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.சீலப்பாடியில் வீட்டின் மேற்கூரை விழுந்து தொழிலாளி பலி
3.திண்டுக்கல்லில் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்தது
4.போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
5.திண்டுக்கல்லில் கார்த்திகை மாதம் தொடக்கம் – கோயில்களில் குவிந்த பக்தர்கள்
Sorry, no posts matched your criteria.