India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (KYC Update செய்ய வேண்டும் என வரும் போலியான குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகாபுரி குடகனாறு அணையின் நீர்வரத்து முழு கொள்ளளவு அடைந்த நிலையில் இன்று விவசாயிகள் பயன்பாட்டிற்காக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் தண்ணீரை திறந்து வைத்து மகிழ்ச்சியுடன் மலர் தூவி வரவேற்றார். இந்நிகழ்வில் ஒன்றிய & பேரூர் திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் (ம) பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வேடசந்தூரில் 27 அடி கொண்ட அழகாபுரி குடகனாறு அணை நேற்று இரவு 7 மணிக்கு 26 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வருவதால் இன்று காலை 10 மணிக்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் திறப்பதாக உதவி பொறியாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுள்ளார்.
திண்டுக்கல், சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக சுகாதாரத் துறையில் பணிபுரியும் பேராசிரியர் ரங்கநாதன், வகுப்பறையில் அரசியல்வாதி போல் நடந்து கொள்வதாலும், பாஜக நிர்வாகி போல் செயல்படுவதாக மாணவர்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். இதன் அடிப்படையில் அவரை விருப்ப ஓய்வு எடுக்க வேண்டுமென கல்லூரியின் துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாமரைப்பாடி நவீன் நகரை சேர்ந்த ஹபிப்ரஹ்மான்(60) சித்த மருத்துவர். இவர் குடும்பத்துடன் வேல்வார்கோட்டையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 1/2 பவுன் தங்க நகை, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரிய வந்தது. அதன் புகாரில் வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
➤சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் போராட்டம் ➤ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கடைகள் ஏலம்: தேதி அறிவிப்பு ➤மாணவர்களை தவறாக வழிநடத்திய பேராசிரியர் மீது நடவடிக்கை ➤பயிர்களுக்கு காப்பீடு: கலெக்டர் அறிவுறுத்தல் ➤திண்டுக்கல் அருகே விபத்து: பெண் உயிரிழப்பு ➤கூகுள் மேப்பை நம்பி சென்றவருக்கு நேர்ந்த கதி ➤திண்டுக்கல்லில் பெய்த மழையின் விபரம் ➤வெள்ள அபாய எச்சரிக்கை.
திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் சார்பில், 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராசு முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிர்புறம் கலைஞர் நூற்றாண்டு காய்கறி மார்க்கெட்பொது ஏலம் வருகின்ற 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11மணிக்கு நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளோர் நகராட்சி அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ஆணையாளர் ஸ்வேதா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.