India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.11.2024 உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் நிர்வாக காரணங்களினால் நாளை (23.11.24) முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மாவட்டத்திலுள்ள 306 கிராம ஊராட்சியிலும் நடைபெறுகிறது. பொதுமக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் “கலைஞர் உதவித் திட்டத்தில்” குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில்கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி), நாகல்நகர், திண்டுக்கல்-624003 (தொடர்பு எண் 0451-2433351, 9080765150) தாய்கோவங்கி, ஒட்டன்சத்திரம் தொடர்பு எண் 04553-244040, 9629098842) தெரிந்து கொள்ளலாம் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்குட்பட்ட நெய்க்காரப்பட்டியில் நேற்று தனியார் ஹோட்டலில் கிரில் சிக்கன், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 5 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து பழனி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் “கலைஞர் உதவித் திட்டத்தில்” குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து விவரங்களுக்கு தாய்கோ வங்கி, நாகல் நகர், திண்டுக்கல்-624003 (தொடர்பு எண் 0451-2433351, 9080765150) , தாய்கோ வங்கி, ஒட்டன்சத்திரம் தொடர்பு எண் 04553-244040, 9629098842) தெரிந்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர்பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமனத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பபடிவத்தை திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து (https://dsdcpimms.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் நகரம், திண்டுக்கல் ஊரக, நிலக்கோட்டை, பழனி, வேடசந்தூர், கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் இரவு ரோந்து காவல் துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ள இரவு நேரங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தொடர்பு கொண்டு உங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு தினந்தோறும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இன்று முகநூல் பக்கத்தில் செல்போனுக்கு வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அதன் மூலம் உங்களது தகவல் திருடப்படலாம் எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்துள்ளனர். இது போன்ற புகாருக்கு சைபர் கிரைம் உதவி எண்: 1930 இணையதளம்: www.cybercrime.gov.in.
➤மதுபோதையில் இளைஞர் ரகளை: வீடியோ ➤போக்குவரத்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை ➤கொடைக்கானலில் இரு வாரத்தில் 2 யானைகள் உயிரிழப்பு ➤அடுத்த 10 ஆண்டுகள் திமுக ஆட்சி தான்: அமைச்சர் ➤ஊசி போட்ட பெண் உயிரிழப்பு ➤பழனியில் திருமாவளவன் சாமி தரிசனம் ➤திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு ➤திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சல் ➤ஆவணங்களின்றி வந்த 3 தனியார் பள்ளி பஸ்கள் பறிமுதல்.
திண்டுக்கல் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொடைரோடு டோல்கேட் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து மதுரைக்கு பயணிகளை ஏற்றி சென்ற ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது சாலை வரி செலுத்தாமல் இருந்த அந்த ஆம்னி பஸ்ஸை பறிமுதல் செய்து ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த 2 வாரங்களில், 2 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. யானைகள் இறந்துகிடந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளும், பிளாஸ்டிக் பைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.