Dindigul

News November 23, 2024

திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

image

1. திண்டுக்கல்லில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
2. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுசாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
3.திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பைரவர் கோயில்களில் தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
4.“கூட்டணியில் தான் பங்கு ஆட்சியில் இல்லை” -அமைச்சர் ஐ.பெரியசாமி
5.திண்டுக்கல் கிராம ஊராட்சி BDO-வுக்கு எதிராக தீர்மானம்

News November 23, 2024

கிராம சபை சிறப்பு கூட்டம்

image

திண்டுக்கல் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடி முன்னிலையில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். 

News November 23, 2024

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ATM -ல் பணம் எடுக்க செல்லும் போது முன்பின் தெரியாத நபர்களிடம் ATM கார்டை கொடுத்து பணம் எடுக்க வேண்டாம். அவர்கள் உங்களை ஏமாற்றி உங்கள் பணத்தை எடுக்க வாய்ப்புள்ளது) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

News November 23, 2024

திண்டுக்கல்லில் கிராம சபை கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

News November 23, 2024

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்

image

திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இன்று (23.11.2024) காலை 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா. பூங்கொடி, முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதனால் இச்சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு பார்வையாளராக பங்கேற்க உள்ளார்.

News November 23, 2024

திண்டுக்கல் மாநகராட்சி எச்சரிக்கை

image

திண்டுக்கல் பகுதி பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கண்காணிக்க குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குப்பை கொட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதற்காக 48 வார்டுகளிலும் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மக்களே ஷேர் பண்ணுங்க

News November 23, 2024

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 3.12.2024 அன்று நடைபெறவுள்ளது. விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ (அ) தொலைபேசி (0451-2461585)வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பு.

News November 23, 2024

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் நிலவரம்

image

திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல் அதிகாரிகளின், இரவு நேர ரோந்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகர்,  ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணி செய்யும் காவலர்களின் பெயர்கள் மற்றும் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News November 22, 2024

மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (26.11.2024) தேதி காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி அறித்துள்ளார். 

News November 22, 2024

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது

image

சமூக பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு (20.12.2024)ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் உள்ளடக்கி இருக்க வேண்டும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!