Dindigul

News November 28, 2024

பாடகி மீது இந்து முன்னணி சார்பாக புகார்

image

கடந்த சில நாட்களுக்கு முன்பு கானா இசை பாடகியும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பாடகியுமான இசைவாணி சபரிமலை ஐயப்பன் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல்களை பாடியதாக அவர் மீது இந்து முன்னணி சார்பில் பழனி நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. உடன் இந்து முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.

News November 28, 2024

திண்டுக்கல்லில் பெய்த மழை அளவு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) காமாட்சிபுரம் 0.30, சத்திரப்பட்டி 4.00, வேடசந்தூர் (தாலுகா அலுவலகம்) 0.00, பழனி 6.00, ரோஜா தோட்டம் 9.50, பிரையண்ட் பூங்கா 6.10,மாவட்டத்தில் மொத்தமாக 26.90,சராசரி மழைப்பொழிவு 2.69 மழை பெய்துள்ளது. மேலும், தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

News November 28, 2024

திண்டுக்கல்லில் கடும் பனி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நாள் முழுவதும் ஏற்பட்ட அதிக பனிப்பொழிவின் காரணமாக நெடுஞ்சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. நான்கு வழிச்சாலைகளில் வாகனப்போக்குவரத்து எப்போதும் அதிகளவில் இருக்கும் நிலையில் திண்டுக்கல் வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. நேற்று நாள் முழுவது காணப்பட்ட பனிப்பொழிவின் காரணமாக கடும் குளிர் நிலவியது.

News November 28, 2024

திண்டுக்கல்லில் வெளுத்து வாங்கிய மழை

image

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையிலும், நேற்று இடைவிடாமல் மழை பெய்து வந்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதியில் மழை நீர் தேங்கியது. இன்று உங்க ஏரியாவில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.

News November 28, 2024

பாலாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

image

திண்டுக்கல்: பழனி பாலாறு பொருந்தலாறு அணை நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் கொள்ளளவு 65 அடி ஆகும். அணைக்கு 727 கன அடி தண்ணீர் வருகிறது. அணை நிரம்பும் நிலையில் பாலாறு, பொருந்தலாறு மற்றும் சண்முக நதியில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை பழனி உபகோட்ட பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 28, 2024

திண்டுக்கல் இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

திண்டுக்கல்லில் புதன்கிழமை (27-11-2024) இன்று இரவு 11.00 மணி முதல், வியாழக்கிழமை (28-11-2024) நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News November 27, 2024

திண்டுக்கல்: திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

திண்டுக்கல்: விட்டல்நாயக்கன்பட்டி அருகே ஆத்துப்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள ரூ.1,70,000 மதிப்புள்ள 90 கான்கிரீட் சீட்டுகள் திருடியது தொடர்பாக, சம்பவத்தில் ஈடுபட்ட தர்மபுரியை சேர்ந்த முருகன்(33), தண்டபாணி(35), சூர்யா(23), சேட்(28) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரியப்பன்(24) ஆகிய 5 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து 1 கார், 1 பிக்கப் வண்டி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

News November 27, 2024

திண்டுக்கல்: பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (27.11.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப், தலைமையில், வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

News November 27, 2024

திண்டுக்கல்லில் நல்ல மழை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) திண்டுக்கல் 7.40, காமாட்சிபுரம் 13.80, நத்தம் தாலுகா 6.00, நிலக்கோட்டை 6.20,சத்திரப்பட்டி 12.40, வேடசந்தூர் (தாலுகா அலுவலகம்) 11.20,வேடசந்தூர் (புகையிலை நிலையம்) 11.00, பழனி 6.00,ரோஜா தோட்டம் 28.50, பிரையண்ட் பூங்கா 28.00,மாவட்டத்தில் மொத்தம் 130.50 மழையும் சராசரியாக 13.05, மழை பெய்துள்ளது.

News November 27, 2024

பழனி உண்டியலில் கிடைக்கப் பெற்ற தொகை

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட (25.11.2024 & 26.11.2024) உண்டியல் திறப்பு மூலம் கிடைக்கப் பெற்ற தொகை 3 கோடியே 81 லட்சத்து, 86 ஆயிரத்து, 614.ரூபாய் ரொக்கமாகவும், வெளிநாட்டு கரன்சி நோட்டு எண்ணிக்கை 729, தங்கம் 1,893 கிராமும், வெள்ளி 11,979 கிராமும் கிடைக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!