India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி முருகன் கோயில் தங்க கோபுரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இன்று போடப்பட்டுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, ரோக்கர் நிலையம், வின்ச் நிலையத்தில் சோதனை செய்யப்பட்ட பிறகே மலைக் கோயிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்: வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே இன்று பிரேக் பிடிக்காமல் அரசு பேருந்து மோதிய விபத்தில் நந்தகுமார் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பாண்டியம்மாள் (62) திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வத்தலகுண்டு காளியம்மன்கோயில் அருகே நின்று கொண்டிருந்த பயணிகள் மீது அரசு பேருந்து மோதி இன்று காலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த நந்தகுமார்(25) என்ற இளைஞர் பரிதாபமாக பலியானார். மேலும் வத்தலகுண்டு அருகே அழகாபுரி பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் (62) படுகாயம் அடைந்தனர். இது குறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்காளியப்பன் மற்றும் ஸ்தபதி தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் சிலை ஆய்வுக் குழுக்கள் வருகை தந்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நவபாஷாண சிலை, மூலவர் சிலை, உற்சவர் சிலை உள்ளிட்டவைகளை ஐஐடி வல்லுநர்கள் துணையோடு ஆய்வு செய்து வருவதால் ஒரு மணி நேரம் சாமி தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று(4.12.24) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், திண்டுக்கல்லில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மக்களே உங்க ஏரியாவில் மழை என்றால் கமெண்ட் செய்யவும்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருக்கோயிலை சுற்றி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் பக்தர்கள் செல்வதற்கு சிரமமாக இருந்தது. இதனை அடுத்து நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கோயில் கிரிவலப் பாதை சுற்றியுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் மூத்தோர் தடகள போட்டிக்கான நேர்முக தேர்வு நடைபெறுகிறது. இதில் 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் நுழைவு கட்டணம் செலுத்தி போட்டியில் பங்கேற்கலாம். இதில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதிபெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (03.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக வாரிய அதிகாரி எனக்கூறி பெற்றோரிடம் வங்கி கணக்கு எண்களை கேட்டு வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.