India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளின் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் செல்போன் நம்பர் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், மனுக்கள் குழுவிடம், தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்சனைகள், குறைகள் குறித்து மனுக்களை(5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு, தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை 600 009″ என்ற முகவரியிட்டு நேரடியாகவோ, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மூலமாகவோ டிச.20ம் தேதிக்குள் அனுப்பலாம்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உங்களது சமூக வலைதளத்தில் உள்ள மெசஞ்சரில் வரும் போலியான லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்களது சமூக வலைதள கணக்குகளின் கடவுச்சொல் (Password) உள்ளிட்ட விபரங்கள் திருடப்பட்டு தவறாக பயன்படுத்த கூடும் எச்சரிக்கை என தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக்பாண்டி என்பவர் கபடி வீரர் ஆவார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள உணவகத்தில் புரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் வாடிப்பட்டி மருத்துவமனையில் முதலுதவி செய்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விளாம்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர்.
பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா நாளை (டிச-7) காப்பு கட்டுதலுடன் துவங்கி டிச-13 வரை நடக்கிறது. நாளை மாலை 5:30 மணிக்கு சாயராட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் துவங்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை தொடர்ந்து டிச-12 மாலை 5:30 மணிக்கு பூஜை சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகார்ச்சனை நடக்கிறது.
திண்டுக்கல் கோவிந்தாபுரம் நாயக்கா் புதுத் தெரு பகுதியில் உடலில் காயங்களுடன் அபூா்வ ஆந்தை ஒன்று வியாழக்கிழமை சுற்றித் திரிந்தது. இதைப் பாா்த்த, ஆட்டோ ஓட்டுநா் மோகன், திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா், காயங்களுடன் இருந்த ஆந்தையை மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.
இந்த ஆந்தைக்கு வனத் துறையினா் சிகிச்சை அளித்தனர்.
திண்டுக்கல்லில் இன்று 05-12-2024 இரவு 11.00 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
1. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
2. சீனா பூண்டு விற்பனையா? உணவுத்துறை அதிகாரி ஆய்வு
3.வணிகர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம்!
4.பழனி முருகன் கோவிலில் வேலை வாய்ப்பு!
5.பழனி மருதாநதி நிரம்பி காணப்படும் காட்சிகள்!
பழனி முருகன் கோவிலில் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 01-07-2024 18 முதல் 45 வரை இந்து மதத்தைச் சேர்ந்த தகுதிகள் & இதர விவரங்கள் www.hrce.tn.gov.in & www.palanimurugan.hrce.tn.gov.in செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ 05.12.2024 முதல் 08.01.2025 வரை மாலை 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
திண்டுக்கல்லில் மரபணு மாற்றப்பட்ட சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மெயின்ரோடு, அரசமரத்தெரு, கச்சேரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டால் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.