Dindigul

News December 7, 2024

திண்டுக்கல் இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம் 

image

திண்டுக்கல் மாவட்டம் இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், திண்டுக்கல் ஊரகம், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து வருகின்றனர். ஏதேனும் புகார் இருப்பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

News December 7, 2024

திண்டுக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ நத்தம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு ➤ திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம் ➤ திண்டுக்கல்லில் பச்சிளம் குழந்தை உட்பட இருவருக்கு டெங்கு ➤ மாவட்டத்தில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் ➤ ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி ஆய்வு ➤ பழனியில் நிரம்பி வழியும் வரதமா நதி ➤ போக்குவரத்துறையை கண்டித்து சிபிஎம் கட்சியினர் மறியல் ➤ கொடைக்கானல் பகுதிகளில் கனமழை

News December 7, 2024

நத்தம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தம் சாலையில் உள்ள பேபி குளத்தில் இன்று 3 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில், கால் இடறி உள்ளே சென்று உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 சிறுவர்களின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

News December 7, 2024

திண்டுக்கல் வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் சான்றிதழ்

image

திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 25,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வேலைவாய்ப்புச் சான்றிதழ் வழங்கினார்.

News December 7, 2024

மாவட்டத்தில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பழனி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் கண்ணன். இந்நிலையில் இவர் வடமதுரைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து வந்த நளினா, பழனிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News December 7, 2024

திண்டுக்கல்லில் பச்சிளம் குழந்தை உட்பட இருவருக்கு டெங்கு

image

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 1 வயது ஆண் குழந்தை உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சுகாதாரத்துறை அலுவலர்கள் டெங்கு பாதிக்கப்பட்ட இருவரின் வீடுகள்,தெருக்களில் கொசு மருந்து அடிப்பது, நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News December 7, 2024

WAY2NEWS-ல் வேலை வாய்ப்பு

image

திண்டுக்கல்லில் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் Way2News-ல் Marketing Exective பணிக்கு 150 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். ஊதியம்- ரூ.15,000- ரூ.25,000 வரை வழங்கப்படும். Share பண்ணுங்க

News December 7, 2024

திண்டுக்கல்லில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணிடங்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் 8,10,12, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங்‌, பார்மஸி, பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0451-2904065, 9499055924 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

பாலியல் வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை 

image

திண்டுக்கல்: கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை, கடந்த 2020ஆம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த விஸ்வநாதன்(21) என்பவரை கள்ளிமந்தயம் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று போக்சோ நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,05,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. 

News December 7, 2024

பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா

image

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் குருநானக் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் தேக்வாண்டோ போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி மாணவி அனுசியா பங்கேற்றார். போட்டியில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையொட்டி பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் நடந்தது.

error: Content is protected !!