India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று வியாழக்கிழமை திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் இரவு ரோந்து விவரம். திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை புகார் இருப்பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறையின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
1.பழநியில் நாளை திருக்கார்த்திகை தீபம்
2.கத்தியை காட்டி மிரட்டிய 10-ம் வகுப்பு மாணவர்
3.மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
4.சிலுவத்துர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை
5.திருக்கார்த்திகை திருநாள் சிறப்பு பஸ் இயக்கம்
திண்டுக்கல் மாவட்டம்தேசிய சுகாதார திட்டத்தின்படி மாவட்ட சுகாதார நலச்சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள காலிபணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்டத்தின் https://dindigul.nic.in/notice category /recruitrment என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவிப்பு.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சாலையை கடக்கும் போது Zebra Cross -யை பயன்படுத்துவோம். விபத்தை தவிர்ப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல், வாணிவிலாஸ் சிக்னல் அருகே இன்று அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை, அதே பள்ளியில் படிக்கும் 15 வயது 10-ம் வகுப்பு மாணவன், கத்தியை காட்டி மிரட்டிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார், தீவிர விசாரணை நடத்தி கத்தி வைத்திருந்த பள்ளி மாணவனை கைது செய்து, அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று காலை திண்டுக்கல் நகர் முழுவதும் தீவிர சோதனையின் போது திண்டுக்கல் மெயின்ரோடு, தியேட்டர் ரோடு பகுதிகளில் செயல்பட்ட 2 கடைகளில் 10 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. இரு கடைகளுக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது. நகர்பகுதிகளில் செயல்படும் 4 கடைகளில் 315 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பழனியில் திருக்கார்த்திகை தீபத் திருநாளான நாளை (டிச. 13 ) மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மதியம் 2 மணி முதல் மாலை 6 வரை பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்கள் யானை பாதை வழியாக மேலே சென்று படிப்பாதை வழியாக கீழேவரும் வகையில் ஒரு வழி பாதை அமல் படுத்தப்படுகிறது. நாளைஇரவு தங்கரத புறப்பாடு நடைபெறாது.
கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து விவரம் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், திண்டுக்கல் ஊடகம், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளின் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
1.எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்
2.திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் மாற்றம்
3.த.வெ.க., நிர்வாகி தற்கொலை முயற்சி, பதவி பறிப்பால் விரக்தி
4.வேடசந்தூர் அருகே கல்லூரி பேராசிரியர் பணியிட நீக்கம்
5.சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக உள்ளது: பிரகாஷ்காரத்
Sorry, no posts matched your criteria.