India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டத்தில் அதிவேகமாக இரு சக்கர வாகனங்கள் இயக்குதல், கனரக வாகனத்தை அதிவேகமாக முந்தி செல்வது, ரேசிங் வாகனம் இயக்குதல் போன்ற ஒழுங்கு செயல்களில் ஈடுபடக் கூடாது. சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் பொது மக்களுக்கு சமூக வலைதளம் மூலம் அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் 14 வட்டத்திற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் காணப்பட்டால் உடனடியாக 1098 என்ற எண்ணை அழைக்கவும். 14 வயதிற்குமேல் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவ குழந்தை தொழிலாளர்களை ஆபத்தான (ம) அபாயகரமான வேலைகளில் பணியமர்த்த கூடாது என்றும் மீறினால் ரூ.20,000 அபராதத்துடன் 1 ஆண்டுகால சிறை தண்டனையும் நீதிமன்றத்தின் வாயிலாக வழங்கபடும் என்று ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி அருகே மகேந்திரமங்கலத்தை சேர்ந்தவர் பிரபு (25).நேற்று விவசாய நில மின்வேலியில் சிக்கி இறந்ததாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இன்று வாலிபரின் உறவினர்கள் பிரபுவை திட்டமிட்டு செல்போனில் அழைத்து கொலை செய்து மின்வேலியில் சிக்கி இறந்ததாக நாடகமாடுவதாகவும், செல்போனில் அழைத்தவர்கள் யார் என விசாரிக்க வலியுறுத்தியும் சாலை மறியல் செய்தனர். காவல் அதிகாரிகள் சமாதானம் பேசியதையடுத்து கலைந்து சென்றனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்க உள்ளக புகார்குழு ICC(ம) புகார்பெட்டி அமைத்திட மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். 07.09.2024-க்குள் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் (ம) நிறுவனங்களில் உள்ளக புகார்பெட்டி ICC (ம) பாதுகாப்பு பெட்டி அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தர்மபுரி அருகே குண்டல்பட்டியில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத் தலைவர் பேராசிரியர் கண்ணதாசன் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மகளிர் சுய உதவி குழுவினர், விவசாயிகள், தொழில்முனைவோர், கோழி வளர்ப்போர் என 8,654 பேருக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்தது. இதனால் அதன் விலை கணிசமாக குறைந்தது. இந்த சூழலில் நேற்று சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து மீண்டும் குறைந்தது. இதனால் கிலோவிற்க்கு ரூ.60 வரை விற்பனையான நிலையில் தற்போது கிலோவிற்க்கு ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்கள் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில் பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், முதியோர் ஓய்வூதியம் போன்ற 540 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மிஷன் வத்சல்யா திட்டம், நிதியாதரவு திட்டத்தின் கீழ், கடந்த ஜமாபந்தியில் விண்ணப்பம் அளித்த பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூபாய் 4000/- வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ஆகியோர் உடன் இருந்தனர்.
தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் 350 மாணவர்களும், 200 மாணவிகளும் என மொத்தம் 550 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் முதல் இடத்தை பிடித்தவர்கள் செப் 20ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளார்கள்.
யூடியூப் வீடியோக்களை லைக் மற்றும் ஷேர் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இதனால் பண இழப்பு ஏற்படலாம். மேலும் சைபர் கொள்ளை தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கலாம் என தருமபுரி மாவட்ட காவல்துறையினர் மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.