India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாலக்கோடு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியான காவாபட்டி கிராமத்தை சேர்ந்த மீனா(57) என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் மதுபானங்களை வைத்து விற்பனை செய்து வருவதாக தொலைக்காட்சியில் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் பாலக்கோடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மீனா நபரிடம் இருந்து சுமார் 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

தொப்பூர் கணவாய் கட்டமேட்டில் நேற்று(பிப்.22) போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த 2 கார்களை சோதனை செய்ததில், மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ்குமார்(25), தேவாரம்(22) ஆகியோரை கைது செய்த போலீசார், சுமார் 500 கிலோ குட்கா பொருகளை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.22) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

தருமபுரி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில்<

அரூர் உதவி ஆட்சியர் அலுவலகம் அருகே, ரிசர்வ் வங்கி விதிகளுக்குப் புறம்பாக அதிக லாபம் தருவதாகக் கூறி விளம்பர பேனர் வைத்த பச்சினாம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். மோசடி செய்யும் நோக்குடன் செயல்பட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் பணம் பறிக்கும் முயற்சியைத் தடுத்த அரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திண்மாச்சி சேர்ந்த 20 வயது மாணவர் கண்ணப்பன் விஷம் குடித்து உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்த அவர் இன்று காலை மயக்கநிலையில் காணப்பட்டார்.பின் , மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை, பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.