India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.25), இரவு முதல் இன்று (பிப்.26) காலை 6 மணி நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று பிப்.25 காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது.
இந்நிகழ்வில் 55 மனுக்கள் மீது விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. மேலும் 44 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று காவல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரியில் அமைந்துள்ள ‘கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்’ ஆன்மீகம் மற்றும் கட்டிடக்கலையின் சங்கமமாகத் திகழ்கிறது. சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோயில், பக்தர்களுக்கு வேண்டுவதை அருளும் ஒரு புனிதத் தளமாகவும் போற்றப்படுகிறது. மேலும், இங்கு பிரார்த்தனை செய்தால் திருமணப் பேறு, புத்திர பாக்கியம், கடன் தொல்லை & வழக்குத் துயரங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்கிறது.

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<

தருமபுரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<

தருமபுரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

தருமபுரி: பி.ஆர் ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், நோயாளியின் நலன் கருதி மீண்டும் அதே இடத்தில் புறநகர் பேருந்து நிலையம் செயல்பட வேண்டி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டி, கவனம் ஈர்க்கும் வகையில்
நாளை(பிப்.26) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னிட்டு வருவாய் துறையில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்கள் 27 பேர் இடமாற்றம் செய்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் நேற்று(பிப்.24) மாலை உத்தரவிட்டார். இதன்படி, ஏழு வட்டாரங்களில் பணிபுரிந்த வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்கள், சிறப்பு வட்டாட்சியர்கள் என 27 பேர் மாவட்டம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை (பிப்.25) நடைபெற உள்ளது. காரிமங்கலம் வட்டார வள மையத்தில். காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.