India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை தருமபுரி எஸ்வி ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல்முறை ஓட்டுபோட வந்த பெண் ஒருவருக்கு டிஆர்ஓ பால் பிரின்சிலி ராஜ்குமார் பரிவட்டம் கட்டி வரவேற்றார்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாராளுமன்றத் தேர்தலையொட்டி இன்று காலை 8 மணிக்கு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி எர்ரப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி எண் 193இல் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரியில் அண்ணா சகரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள பூத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. முதல் 2 வாக்குகள் மட்டும் பதிவான நிலையிலேயே இயந்திரம் பழுதாகியதால், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நேற்று குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரது காலில் கண்ணாடி துகள்கள் காலில் பட்டு காயமடைந்தார். உடனடியாக தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு அவரை மீட்டு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
ஏப்ரல் 18 வியாழக்கிழமை குமாரசாமிபேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னை கேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. பெருமாளுக்கு புதியதாக வடிவமைக்கப்பட்ட தேரில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் காலையில் பக்தர்கள் நிலை பெயர்த்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பண்பாடு மற்றும் விளையாட்டில் வட்டார அளவில் பலகுரல் போட்டியில் நகராட்சி பள்ளி மாணவர் முதல் இடம் பெற்ற வெ.ஜோதிஸ்வரன் மாணவரை இன்று வட்டாரக் கல்வி அலுவலர் த.ஆசிரியர் கு.விஜயலட்சுமி சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவி்த்தனர். உடன் வகுப்பு ஆசிரியர்
வ.செளந்திரபாண்டியன் உடனிருந்தார்.
தர்மபுரி,செந்தில் நகரை அடுத்துள்ள ராஜாஜி நீச்சல்குளம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பாக நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது இந்த நீச்சல் குளத்தின் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை குதூகலமாக குளித்து வருகின்றனர் தர்மபுரியில் நாளைக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இன்று வெயிலின் தாக்கம் 12 டிகிரி அதிகரித்துள்ளதால் வெயிலின் தாக்கம் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
Sorry, no posts matched your criteria.