India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மாதிரி பள்ளி, காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பேகாரஹள்ளி அ.மே.நி.பள்ளி, நத்தமேடு அ.மே.நி.பள்ளி, அரூர் அருகே நரி பள்ளியில் உள்ள பழங்குடியினர் நலத்துறைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகள் 12ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தின் படி தமிழ்நாடு அளவில் தருமபுரி 25வது இடத்தை பிடித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்திலிருந்து +2 தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவிகள் -18,416; தேர்ச்சி பெற்ற மாணவ மணவிகள் – 17,228; தேர்வு எழுதிய மாணவர்கள் – 8,904; மாணவர்கள் தேர்ச்சி – 8,161; தேர்வு எழுதிய மாணவிகள் – 9,512; தேர்ச்சி பெற்ற மாணவிகள் – 9,067; மாணவர்கள் சதவிகிதம் – 91.66%; மாணவிகள் சதவிகிதம் மொத்தம் – 96.32% என மொத்தம் 93.55% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் மாவட்டத்தில் 93.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 91.66 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 95.32 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
தருமபுரி அருகே உள்ள சோகத்தூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை(மே 7) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எம்.ஜி.ஆர்.நகர், ஏஎஸ்டிசி நகர், நந்தி நகர், பென்னாகரம் மெயின் ரோடு, சத்யா நகர், ஜெ.ஜெ.நகர், வள்ளி நகர், மாந்தோப்பு, வி.ஜெட்டிஅள்ளி, பிடமனேரி, ஏ.ஆர்.கோட்ரஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்கி வரும் வணிகப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணிகர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் பெருந்தொழிலாக வளர்ந்துவரும் வணிகமும், அதிலும் சில்லரை வணிகமும் நாளுக்குநாள் அதிகரித்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது” என எம்எல்ஏ ஜி.கே.மணி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. காலை 6-8, மாலை 4-6மணி வரையும் இரண்டு கட்டமாக பயிற்சி நடைபெறும். இதில், 10 முதல் 15 வயது உள்ள பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமை மாவட்ட கால் பந்து கழகத் தலைவர் ஆனந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசியது. இந்நிலையில் நேற்று (4.5.2024) ஒட்டனூர், ஏமனூர், தொதியன், கொட்டாய் கருங்காலி மேடு, நெருப்பூர், காட்டூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் அப்ப பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தர்மபுரியில் உள்ள தீர்த்த கிரீஸ்வரர் கோவில் அரூர்-திருவண்ணாமலை சாலையில் 17 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது . வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது . தெற்கே எம தீர்த்தம் உள்ளது ,இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிடக்கத்தக்கது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் கணவாயில் இன்று(மே 4) அதிகாலையில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி உருளைக்கிழங்கு ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.