Dharmapuri

News March 4, 2026

தருமபுரி: வாழ்க்கையில் எதிர்ப்புகள் நீங்கி வெற்றி பெற..!

image

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதியமான் கோட்டை காலபைரவர் கோயில், தென்னகத்தின் மிகச்சிறந்த பரிகாரத் தலமாகும். நம் வாழ்வின் தீராத வினைகளையும், எதிர்ப்புகளையும் நீக்கும் சக்தி படைத்தவர் இக்கோயில் காலபைரவர். குறிப்பாக தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால், ராகு-கேது தோஷங்கள் நீங்கி, தடைபட்ட காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர்!

News March 4, 2026

தருமபுரி நீதிமன்றத்தில் இலவச ஆலோசனை பெறுவது எப்படி?

image

தருமபுரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். தருமபுரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04342-233781, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 4, 2026

தருமபுரி: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா? MUST KNOW!

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account-க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News March 4, 2026

தருமபுரி: கரண்ட் கட்? WhatsApp மூலம் எளிய தீர்வு!

image

தருமபுரி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

தருமபுரி: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

பாப்பிரெட்டிப்பட்டி: 7 புதிய வீடுகள் திறப்பு

image

பாப்பிரெட்டிப்பட்டி பூதநத்தம் ஊராட்சியில் தனியார் அறக்கட்டளை சார்பில் புதிதாக 7 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று மாவட்ட ஆட்சியர் சதீஸ், அறக்கட்டளைத் தலைவர் ஸ்வரன் சிங் முன்னிலையில் திறந்து வைத்தார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News March 4, 2026

தருமபுரி: ஆற்றில் குளித்தவர் சடலமாக மீட்பு

image

ஒகேனக்கல்: திருக்கோவிலுார் அருகே உள்ள பெருமணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், 24. ஓசூரிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஞாயிறு அன்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அங்கு தடை செய்யப்பட்ட கோத்திக்கல் பரிசல் துறை அருகே குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கினார். இந்நிலையில் நீண்ட தேடுதலுக்கு பிறகு அதே பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை.

News March 4, 2026

தருமபுரி: ஓடிச் சென்று பார்த்த MP

image

தனியார் விவாத நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சேகர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ.மணி MP நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், இது குறித்து திமுக கழக முன்னோடிகளுடன் கலந்தாலோசித்தார்.

News March 4, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03), இரவு முதல் இன்று (மார்ச்.04) காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

News March 3, 2026

தருமபுரி: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் செய்யவும்<<>>. ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

error: Content is protected !!