Dharmapuri

News May 11, 2024

தர்மபுரி மழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

டூவீலர்கள் மோதல்.. பழ வியாபாரி பலி

image

பாலக்கோட்டை சேர்ந்த பழ வியாபாரி அயூப்(55) என்பவர் தனது டூவீலரில் இன்று சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே பைக்கில் வந்த கொட்டா பள்ளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மணிகண்டன் இவர் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் இருவரையும் பாலக்கோடு ஜிஹெச்-சில் சேர்த்தனர். அங்கு அயூப் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 10, 2024

எஸ் எஸ் எல் சி பொதுத்தேர்வு முடிவுகள்

image

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த முடிந்த 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் 9270 பேர், மாணவிகள் 9409 பேர் என மொத்தம் 18679 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 89.46% தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 1.01% அதிகரித்துள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 10, 2024

பென்னாகரம் அரசு கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்

image

2024-2025ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள், <>https://www.tngasa.in/<<>> என்ற இணையதள முகவரியில், வரும் 20ம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், இக்கல்லூரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என பென்னாகரம் அரசு கலை கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

News May 10, 2024

மூதாட்டி பற்றி தகவல் தெரிவிக்க எண் வெளியீடு

image

தருமபுரி, தோக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மூக்கமாம்மாள் என்ற மூதாட்டி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 19A பஸ் ஏறி தருமபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட்க்கு வந்தவர் மீண்டுமட் வீடு திரும்பவில்லை. எனவே இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் A. சந்திரா மேரி என்பவருக்கு 9940420996 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

News May 10, 2024

பூரிக்கல் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் சாதனை!!

image

நல்லம்பள்ளி மானியத அள்ளி ஊராட்சி ஜருகு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மேல் பூரிக்கல் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் S.பிரதீப் குமார் 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்தார். மேலும் பூரிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் +12, 10, பொது தேர்வில் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

சொத்து தகராறு: தாயை தாக்கிய மகன் கைது

image

ஏரியூர், வெள்ளமன் காடு பகுதியை சேர்ந்த தம்பதி ராஜீ, வளர்மதி(55). இவர்களுக்கு 3 மகன் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்களது இரண்டாவது மகன் ரத்தினவேல், வளர்மதி யிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்து, வீட்டில் இருந்த மரப் பொருட்களுக்கு தீ வைத்துள்ளார். அதனை தடுக்க முயன்ற தாய் வளர்மதியை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் பெரும்பாலை போலீசார் நேற்று ரத்தினவேலை கைது செய்தனர்.

News May 10, 2024

நுங்கு வாங்கியதால் மனைவி மகளுக்கு கத்தி குத்து

image

கோபாலபுரத்தை சேர்ந்த தம்பதி தனசேகரன், யாசின். மகள்கள் ஷாந்தினி, ஷபானா. நேற்று யாசின் நுங்கு வாங்கி வந்ததாக கூறப்படுகிறது அதற்கு தனசேகரன் எதற்கு அதிகமான நுங்கு வாங்கினாய் என கேட்டு யாசினை கத்தியால் தாக்கி உள்ளார். இதனை தடுக்க முயன்ற ஷாந்தினி க்கும் கத்தி குத்து விழுந்தது. இதனை அடுத்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

News May 10, 2024

தர்மபுரி 27ஆவது இடம் !

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.58% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 83.35 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.66 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் தர்மபுரி மாவட்டம் 27ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

10th RESULT: தருமபுரியில் 90.45% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் 90.45% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.51% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.55% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.