Dharmapuri

News March 9, 2026

தருமபுரி: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

தருமபுரி மாவட்டம்- ஓர் பார்வை!

image

1. நகராட்சி- 1(தருமபுரி)
2. பேரூராட்சிகள்- 10
3. வருவாய் கோட்டம்- 2
4. தாலுகா-7
5. வருவாய் குறுவட்டம்- 23
6. வருவாய் கிராமங்கள்-479
7. ஊராட்சி ஒன்றியம்-9
8. கிராம பஞ்சாயத்து- 251
9. MP தொகுதி-1 ( தருமபுரி)
10. MLA தொகுதி- 5
11. மொத்த பரப்பளவு – 4497.77 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News March 9, 2026

தருமபுரியிலிருந்து திருச்சி நோக்கி ஆ.மணி எம்.பி அழைப்பு

image

தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் ஆ. மணி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய திருச்சி சிறுகனூரில் இன்று (திங்கட்கிழமை) தி.மு.க. மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க தருமபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 9, 2026

தருமபுரி: கால்வாயில் விழுந்து முதியவர் பரிதாப மரணம்

image

அரூர் அருகே கூக்கடப்பட்டியைச் சேர்ந்த சென்னகிருஷ்ணன்(70), வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சாலையோரப் பாலத்திலிருந்து கீழே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2026

தர்மபுரி மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.08), இரவு முதல் இன்று (மார்ச்.09) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

News March 8, 2026

தருமபுரி: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க!

image

தருமபுரி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News March 8, 2026

தருமபுரி: தீராத நோய் தீர்க்கும் தீர்த்தம் கொண்ட கோயில்!

image

தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்குள்ள தீர்த்தத்தில், அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால், நீராடுபவர்கள் உடற்பிணி, உளப்பிணி யாவும் தீர்ந்து, புத்துணர்வும், புதுவாழ்வும் பெறுகின்றனர். மேலும் இக்கோயிலில் கடன் தொல்லை தீர வேண்டுவதுடன், வீடு கட்டவும், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 8, 2026

தருமபுரி: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News March 8, 2026

தருமபுரியில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!

News March 8, 2026

தருமபுரி : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!
↑