India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள 1644 இடங்களை நிரப்பும் பொருட்டு, தகுதியுள்ள மாணவர்கள் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ. சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு அறிய 9894032730 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.07) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மனோகரன் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில், 2022 முதல் 2025 வரை 12-ம் வகுப்பு முடித்து, உயர்கல்விக்கு சேராத மாணவ, மாணவிகளுக்காக, தமிழக அரசின் ‘உயர்வுக்கு படி’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், வரும் செப்டம்பர் 8-ம் தேதி அன்று அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு, மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று (செப்.6) பார்வையிட்டார். அப்போது, அரசுத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தருமபுரி மாவட்ட வேளாண்மை அலுவலர்கள் சங்கத்திற்கு, நான்காவது முறையாக மாவட்டத் தலைவராக, காரிமங்கலம் உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணன், ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு, விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் தரப்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தொப்பையாறு அணைப் பகுதியில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைவெள்ள மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி, இன்று (செப்.6) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள், மழைவெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்துப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, மாவட்டக் SP மகேஸ்வரன், DRO உடன் இருந்தனர்.

தர்மபுரி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) வரும் 08.09.2025 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டத்தில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் 2025 – 26 கல்வியாண்டில் சேர www.dmcdpi.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
Sorry, no posts matched your criteria.