India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மற்றும் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 24 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 10/05/ 2024 முதல் 07/ 06 /2024 வரை விண்ணப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 13/ 06/ 2024 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 94458 03042, 93617 45995 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முடிவடைந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் 6.6.2024 அன்று விளக்கிக் கொள்ளப்பட்டதால், வரும் 10.6.2024 திங்கட்கிழமை முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 10 மணி முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற உள்ளது.
தர்மபுரி; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கி பணிகளுக்கான கட்டணம் இல்லாமல் ஆறு மாத கால உறைவிடப் பயிற்சி வழங்க ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தர்மபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் மணி வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் கருணாநிதி, அண்ணா நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி செந்தில் குமார், மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த நில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அடிலம் ஊராட்சி அ.சப்பாணிப்பட்டியில் உள்ள பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்படும் உயர்மட்ட மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று (ஜுன் 7) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று(07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. தருமபுரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பாலக்கோடு ARG, பாலக்கோடு ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், மரத்தஹள்ளியில் 4 செ.மீட்டரும், ஹரூர், பென்னாகரம் பகுதியில் 3 செ.மீட்டரும், தர்மபுரி PTO பகுதியில் 2 செ.மீட்டரும், தர்மபுரி நகரம் ப்குதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
தருமபுரி மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தருமபுரி உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.