India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக <

தருமபுரி மாவட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின் பேரில், இன்று (செப்.10) முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வுகள் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள், செப்டம்பர் 25 வரை நடைபெற உள்ளன. தேர்வுகளைக் கண்காணித்து வழிநடத்துவதற்காக, தருமபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய நான்கு இடங்களில், வினாத்தாள் கட்டு காப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில் மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA, BSc, BE, B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் முகாம் வருகின்ற 12ம் தேதி அன்று குண்டல்பட்டி கிராமம், வருவான் வடிவேலன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் செப் .11 ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள் வெளியிட்டுள்ளது. தருமபுரி என்.கே திருமண மண்டபம் சத்யா நகர், பி. மல்லாபுரம் சமுதாயக்கூடம் சந்தை தெரு, பாப்பிரெட்டிப்பட்டி விபிஆர்சி கட்டிடம் பட்டுக்கோணம்பட்டி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காரிமங்கலம் சமுதாயக்கூடம் பெரியாம்பட்டி, அரூர் செந்தூர்மஹால் செட்ரப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இன்று காரிமங்கலம் டவுன் பகுதிகளில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ் ஐ சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஜீவா 27, வசந்த் 32, சுரேஷ் 41, முனியப்பன் 33, தமிழ்செல்வன் 45 ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.2500 மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.09) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் முகாம் வருகின்ற 12ம் தேதி வெள்ளிகிழமை அன்று தருமபுரி வட்டம், குண்டல்பட்டி கிராமம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வருவான் வடிவேலன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை RPRS திருமண மஹாலில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ்(செப்-9) இன்று வழங்கினார். உடன் வட்டாட்சியர்கள் ராஜராஜன், சௌகத்அலி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம், 2026 தேர்தலை நோக்கிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, மாவட்ட வாரியாகப் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். வரும் செப்.13-ல், திருச்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் விஜய், அக்.18 வேலூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தங்கள் பகுதிக்கு வரும் தலைவர் விஜயைக் காண, தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.