Dharmapuri

News September 12, 2025

தர்மபுரியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் அறிவிப்பு

image

ஒகேனக்கலில் உள்ள பெரியார் மண்டபத்தில் கிராம விழிகள் அறக்கட்டளை சார்பாக வருகின்ற நாளை மாபெரும் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், பொதுமக்களின் முக்கிய சட்டங்களான மனித உரிமை மீறல், தகவல் அறியும் உரிமை சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

News September 12, 2025

தருமபுரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 1784 கன அடியில் இருந்து 2195 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் தி.மலை ஆகிய மூன்று மாவட்டங்களின் தென்பெண்ணை ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 12, 2025

தர்மபுரியில் நாளுக்கு நாள் வளரும் அதிசய சிவலிங்கம்

image

தர்மபுரியில் அமானி மல்லாபுரத்தில் உள்ள சுயம்புலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு நடைபெறும் மாத சிவராத்திரி, மார்கழி திருவாதிரை மற்றும் பிரதோஷ பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். கல்வி சிறக்க, திருமணத் தடை நீங்க மற்றும் ஜாதக தோஷங்கள் விலக பக்தர்கள் வழிபடும் முக்கிய இடமாக திகழ்கிறது. இந்த அதிசய கோயிலை பற்றி மற்றவருக்கும் பகிருங்கள்.

News September 12, 2025

தருமபுரி: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

தருமபுரி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 12, 2025

தருமபுரி: 8ஆம் வகுப்பு போதும்! நல்ல சம்பளத்தில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப 8 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் ரூ.15,700 – ரூ.Rs.71,900 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100. விருப்பமுடையவர்கள் வரும் செப்.30க்குள் இந்த <>இணையத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 12, 2025

தருமபுரி: மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

image

தருமபுரி மாவட்டம், புழுதிக்கரை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான மவுலிராசு (25), கடந்த முன்தினம் தன் வீட்டில் உள்ள அறையில் உடலில் தீக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். அவரது செல்போனை பழுது செய்தபோது மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

News September 12, 2025

தர்மபுரியில் இருந்து தேர்வான தமிழ்நாட்டின் முதல் பெண்

image

தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் தர்மபுரி மாவட்டதை சேர்ந்த திலகவதி. 34 ஆண்டுகள் அத்துறையில் 5கும் மேற்பட்ட பிரிவுகளில் பணியாற்றினார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாளப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்தார். மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரின் கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். ஷேர் பண்ணுங்க!

News September 11, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.11) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 11, 2025

தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் பரவலாக சாரல் மற்றும் கனமழை பெய்தது. இன்று காலை 6:30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாப்பாரப்பட்டியில் 65.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பென்னாகரம் 36.8 மி.மீ, நெருப்பூர் 45.2 மி.மீ, கலப்பம்பாடி 64.4 மி.மீ, சுஞ்சல் நத்தம் 34.4 மி.மீ, இண்டூர் 33.20 மி.மீ எனப் பல பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

News September 11, 2025

தருமபுரி: டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டதா?

image

தருமபுரி மக்களே, உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் <<>>செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!