India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை தருமபுரி மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 16,000 கன அடியாகக் குறைந்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிப்பதற்கும், படகு சவாரி செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் வரும் செப்.16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT

தருமபுரியில் இன்று செ.14 இரவு பாதுகாப்பு நடவடிக்கைக்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக டி.எஸ்.பி. எம். ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளார். மாவட்டத்தின் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு பகுதிகளில் போலீஸ் நிலைய வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலை பராமரிக்க கடுமையான ரோந்து மேற்கொள்ளப்பட உள்ளது. ஷேர் IT

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்கள் இந்த 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாம். *இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க*

தருமபுரி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தருமபுரி மாவட்ட மக்கள் 94431-11912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயண தேதியில் மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் , தருமபுரி மாவட்டத்தில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த எடப்பாடி பழனிசாமி, அதனை செப்.29, 29 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 2700 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1157 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கிக் கடன் தொடர்பான 150 வழக்குகளில், 118 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தமாக, 1275 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு நீதி கிடைத்தது.

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <
Sorry, no posts matched your criteria.