India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அழகிற்காக இளம் (young professional) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம். மேலும் தர்மபுரி மாவட்ட இணையதள முகவரி https://dharmapuri.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் பணியிடங்களுக்கு 42 வயது உட்பட்ட தகுதி வாய்ந்த ஆண் பெண் நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க www.dharampuri.nic.in இணையதளத்தில் பிப்.17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க

குண்டல்பட்டியை சேர்ந்த முத்துசாமி விவசாயி இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. நேற்று, குண்டல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே முத்துசாமி சடலமாக இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மதிகோன்பாளையம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜன.31) வெள்ளிக்கிழமை நாளை காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. எனவே, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தர்மபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். (ஜனவரி 29) இரவு காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று 29.01.2025 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. 58 மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டு 54 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. புதிதாக 30 மனுக்கள் பெறப்பட்டன.

தமிழக வெற்றிக்கழகத்தின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். மாவட்டத் துணைத் தலைவர், துணை செயலாளர், பொருளாளர் ஆகியோரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், சிவாவுக்கு கட்சி நிர்வாகிகள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பி.பள்ளிப்பட்டி அருகே உள்ள அஜ்ஜம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (23). கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் லோகேஷ்வரனுடன் நேற்று அரூர்-க்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது பூனையானூர் அருகே வந்த போது தனியார் பஸ், பைக்மீது மோதியது. இந்த விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் லோகேஸ்வரன் படுகாயமடைந்தார். விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமர் இவரது மகன் ஜெயசங்கர் (17). இவரது நண்பர் அதே பகுதியை வல்லரசு (17). இருவரும் பைக்கில் நேற்று பையர்நத்தம் நோக்கி சென்றபோது அந்த வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியதில் ஜெய்சங்கர் உயிரிழந்தார். இதில், வல்லரசு காயமடைந்தார். இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேர் செய்யவும்..

காரிமங்கலம் அருகே பைசுஅள்ளி சின்னபுதூரை சேர்ந்தவர் லோகேஷ்குமார். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்-ஆக உள்ளார். இவர் நேற்று மாலை காரிமங்கலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி பைக்கில் கெரகோடஅள்ளி பிரிவு சாலை அருகே சென்றபோது தர்மபுரியில் இருந்து வந்த சரக்கு வேன் பைக் மீது மோதியதில் லோகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஷேர் செய்யவும்..
Sorry, no posts matched your criteria.