India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகிற்காக இளம் நெறிஞர் (Young Professional) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 27.01.2025 முதல் 17.02.2025 தேதிக்குள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தினை https://dharmapuri.nic.in என்ற இணையதளம் மூலம் அனுப்பவும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த 30.12.2024 வரை நெல், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 48,797 விவசாயிகளுக்கு ரூ.489.22 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருப்பு இல்லை. கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 5.892 குவிண்டால் சர்க்கரை இருப்பு உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பூச்சி நோய் விழிப்புணர்வு வழிகாட்டியினை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மலர்விழி உள்ளிட்ட அரசுத்துறை அனைவரும் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு இன்று (ஜன.31) பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த கி. சாந்தி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சதீஸ் என்பவரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். <

தருமபுரி மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு ராபி பருவத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிர்களுக்கு இன்று (ஜன. 31) விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.517 தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

தருமபுரி மாவட்டத்தில் 70 ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய ஆதார் பெறுவது மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஆதார் மையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் ஆதார் மையத்தில் இலவசமாக கொடுக்கப்படும் விண்ணப்பங்களை மட்டுமே பூர்த்தி செய்து வழங்கவேண்டும். சேவை மையங்களை https://bhuvan-app3.nrsc.gov.in/aadhaar/என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.

தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தர்மபுரி மற்றும் அரூர் சுற்றியுள்ள காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்கலாம்.

தருமபுரி மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அழகிற்காக இளம் (young professional) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம். மேலும் தர்மபுரி மாவட்ட இணையதள முகவரி https://dharmapuri.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் பணியிடங்களுக்கு 42 வயது உட்பட்ட தகுதி வாய்ந்த ஆண் பெண் நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க www.dharampuri.nic.in இணையதளத்தில் பிப்.17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.