Dharmapuri

News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, தர்மபுரியில் மருத்துவர் கா.அபிநயா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2024

தருமபுரி அருகே பங்குனி உத்திர திருவிழா!!

image

அன்னசாகரம் கிராமத்தில் பங்குனி உத்திரம் திருவிழா புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று இரவு 8 மணியளவில் பங்குனி உத்திர திருவிழா விழா கோலாகலம் நடைபெற்றது. விழாவில் வள்ளி முருகப் பெருமான் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News March 23, 2024

தருமபுரி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

தருமபுரி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அசோகன், அவர்கள் அறிமுக கூட்டம் அரூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. உடன் அம்மா பேரவை தலைவர், எஸ்.ஆர் வெற்றிவேல் தருமபுரி நகர மன்ற தலைவர், பூக்கடை ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

News March 23, 2024

நிறுவனர் ராமதாஸுடன் பாமக வேட்பாளர் சந்திப்பு

image

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சௌமியா அன்புமணி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் அரசாங்கம் உடன் இருந்தனர்.

News March 23, 2024

தர்மபுரி: எஸ்பி அதிரடி ஆய்வு

image

பாராளுமன்ற தேர்தல் 2024ஐ – முன்னிட்டு தர்மபுரி தொகுதி முழுவதும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் சோதனை சாவடி மற்றும் வாக்கு சாவடிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News March 22, 2024

தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி

image

தருமபுரி மக்களவை தொகுதியில் செளமியா அன்புமணி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தருமபுரி பாமக வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசாங்கம் சற்றுமுன் மாற்றப்பட்டார். பாஜக என்டிஏ கூட்டணியில் பாமக மாநிலம் முழுவதும் 10 தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

தர்மபுரி அருகே கோர விபத்து 

image

அரூர் வட்டம் சேலம் நெடுஞ்சாலை மஞ்சவாடி கணவாய் அருகில் மார்ச் 22 ஆம் தேதி இரும்பு தளவாடங்கள் ஏற்றிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் (லாரி) டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது.

News March 22, 2024

முதலமைச்சர் ஸ்டாலின் தருமபுரி வருகை

image

ஏப்ரல் 19 நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மக்களவை வேட்பாளர் மணியை ஆதரித்து மார்ச் 29ம் தேதி அன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் அவர் பிரச்சாரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இருப்பதால் கட்சி நிர்வாகிகள், உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இன்று(மார்ச் 22) திமுக தலைமை அறிவித்துள்ளது.

News March 22, 2024

தருமபுரி பாமக வேட்பாளர் அறிவிப்பு

image

தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு, புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 22, 2024

தருமபுரி: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பேனர் வைத்து இன்று(மார்ச் 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டா கோரி பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டு மனு கொடுத்தும், இதுவரை தங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை என தெரிவிக்கும் இம்மக்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.

error: Content is protected !!