India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.19) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன், தொப்பூரில் ஜீலான்பாஷாபாஷா, மதிகோன்பாளையத்தில் சரவணன்மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!

தருமபுரி மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <

தருமபுரியில் படிப்பித்த வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவி தொகை வழங்கபட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லையெனில் மாதம் ரூ.200, தேர்ச்சி ரூ.300, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி ரூ.600 வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ஆம் வகுப்புக்கு ரூ.600, 12-ஆம் வகுப்புக்கு ரூ.750, பட்டப்படிப்பு ரூ.1000 பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும்.

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.19) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1-கிலோ) தக்காளி: ரூ.25, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.15, முள்ளங்கி: ரூ.15, அவரைக்காய்: ரூ.34, கொத்தவரை: ரூ.60, பச்சைமிளகாய்: ரூ.45, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

தருமபுரி மக்களே! உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கம்பைநல்லூர் அருகே மஞ்சமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் (38). இவர், நேற்று (ஜன.18) மாலை அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி பரிதமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறந்து கிடந்த கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தருமபுரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயண சலுகை அட்டை (பஸ் பாஸ்) வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் பயனாளிகள் தங்களின் ஆதார், புகைப்படம், அடையாள அட்டை, கல்வி பயிலும்/பணிபுரியும்/தொடர் மருத்துவ சிகிச்சை சான்றிதழ்களை சமர்ப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ)<
Sorry, no posts matched your criteria.