Dharmapuri

News January 20, 2026

தருமபுரி: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> இங்கு கிளிக் <<>>செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

தருமபுரி: பொங்கல் விழாவில் தகராறு – அதிமுக பிரமுகர் கைது!

image

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே மாதேஹள்ளியில் பொங்கல் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வேலாயுதம் என்பவரது குடும்பத்தினரை அதிமுக நிர்வாகி தர்மன் உள்ளிட்ட 6 பேர் தாக்கியுள்ளனர். பின், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், அதிமுக செயலாளர் தர்மன் உட்பட 6 பேர் மீது கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 20, 2026

தருமபுரி: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

தருமபுரி மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE!

News January 20, 2026

தருமபுரி உழவர் சந்தை விலை நிலவரம்

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.20) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.24, கத்தரிக்காய்: ரூ.14, வெண்டைக்காய்: ரூ.15, முள்ளங்கி: ரூ.18, அவரைக்காய்: ரூ.34, கொத்தவரை: ரூ.65, பச்சைமிளகாய்: ரூ.40, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News January 20, 2026

தருமபுரியில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

image

சோகத்தூர், அதகப்பாடி மற்றும் வெள்ளிசந்தை துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து குமாரசாமிபேட்டை, சோகத்துார், ரெட்டிஹள்ளி, ஏ.ஆர்.கோட்ரஸ், பிடமனேரி, பங்குநத்தம், அதகபாடி, சோம்பட்டி, இண்டூர், பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, வெள்ளிசந்தை சுற்றுபுற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

தருமபுரியில் ரூ.11.18 கோடிக்கு விற்பனை!

image

தருமபுரி மாவட்டத்தில் 66 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சராசரியாக தினமும் ரூ.2.20 கோடி மதுபானங்கள் விற்பனையாகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் ரூ.11.18 கோடிக்கு மது விற்பனை நடந்ததாகவும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மது விற்பனை சரிந்து காணப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் நேற்று (ஜன.19) மாலை தெரிவித்துள்ளனர்.

News January 20, 2026

தருமபுரி: கடைக்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

image

மோளையானூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் முகேஷ் (14). கடந்த 17-ம் தேதி இரவு கடைக்கு சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடிய போது அப்பகுதி அரசு பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்றில் முகேஷ் இறந்து கிடந்தார். மேலும் அவரது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 20, 2026

தருமபுரி: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.19) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன், தொப்பூரில் ஜீலான்பாஷாபாஷா, மதிகோன்பாளையத்தில் சரவணன்மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!

error: Content is protected !!