Dharmapuri

News January 19, 2026

தருமபுரியில் மின் தடை! உங்க ஏரியா இருக்கா?

image

வெள்ளிசந்தை துணைமின் நிலையத்தில் நாளை (ஜன.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, அமானிமல்லாபுரம்,மோட்டூர், மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

தருமபுரி: இரவு ரோந்துப் செல்லும் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜன-18) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் யுவராஜ் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் ,தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

தருமபுரி: இரவு ரோந்துப் செல்லும் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜன-18) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் யுவராஜ் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் ,தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

இதுதான் தர்மபுரியின் நிஜ பெயரா?

image

“தர்மம் + புரி” = தர்மபுரி, தமிழில் “தர்மம்” என்பது நீதியும் நற்பணியும் குறிக்கும்.“புரி”என்பது இடம் என அர்த்தம் கொண்டது. தர்மபுரி என்பது”நீதியின் நகரம்”என்ற பொருளைக் கொண்டது. சில வரலாற்று ஆவணங்களில் தர்மபுரி, ”தகடூர்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் தர்மபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமானது. சேலத்திலிருந்து இருந்த தருமபுரி, அக்.2 1965ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.ஷேர்

News January 18, 2026

தருமபுரி: 12th, டிப்ளமோ, ITI படித்தவரா நீங்கள்?

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்

News January 18, 2026

தருமபுரி பெண்களே: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

image

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் <>தாட்கோ <<>>இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்! ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

தருமபுரி: வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா?

image

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பித்து, உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறைக்கு நேரில் சென்று கிட்டை பெற்று கொள்ளலாம். இவை அனைத்தையும் பயனாளிகளுக்கு எந்தவித பணமும் செலுத்தாமல் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

தருமபுரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தருமபுரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

தருமபுரி அருகே வேன் கவிழ்ந்து 7 பெண்கள் படுகாயம்

image

ஓசூர் அருகே பாகூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஆன்மிகப் பயணம் முடிந்து திரும்பியபோது, தருமபுரி சோகத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராமக்கா, லட்சுமி உள்ளிட்ட 7 பெண்கள் காயமடைந்தனர். தருமபுரி டவுன் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 18, 2026

தருமபுரி: சீட்டு மோசடியில் காசு போச்சா? கவலை வேண்டாம்!

image

தருமபுரி மக்களே, சீட்டு நடத்தி ஏமாற்றுபவர்களிடம் பணத்தை இழந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம். இழந்த தொகை மற்றும் ஏமாற்றப்பட்ட விதம் குறித்துப் புகாரில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சட்ட ரீதியான தீர்வுகளுக்கு வழக்கறிஞரை அணுகுவது சிறந்தது. இது குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!