Dharmapuri

News April 13, 2024

நல்லம்பள்ளி திமுகவினர் பரப்புரை

image

தர்மபுரி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் திமுக தேர்தல் பரப்புரை நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக நட்சத்திர பேச்சாளர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டு திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மணியை ஆதரித்து தமிழக அரசின் நலத்திட்டங்கள் சாதனைகள் குறித்து மக்களிடையே பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

News April 12, 2024

தருமபுரி: கலெக்டர் உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில் வரும் 17.4.2024 அன்று காலை 10 மணி முதல் வாக்களிக்கும் நாளான 19.4.24 நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 ஆகிய நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News April 12, 2024

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்ற காவலர்கள்

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று சமத்துவ நாள் உறுதி மொழியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் வாசிக்க அதனை தொடர்ந்து காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், காவல் துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம், நிர்வாக அலுவலர் பாரதி மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் இந்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

News April 12, 2024

மனைவியை கொன்ற கணவர் கைது

image

பாலக்கோடு அருகே குண்டுபள்ளம் கிராமத்தில் சிவலிங்கம்(65) என்பவர், தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரது மனைவி நன்றாக வேலை செய்ய வலியுறுத்தி உள்ளார். இதில் ஆத்திரமடைந்து அருகில் இருந்த உலக்கையால் தலையில் அடித்து, கழுத்தை கொடுவாளால் அறுத்துக் கொன்றார். தகவல் அறிந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி சிவலிங்கத்தை கைது செய்துள்ளனர்.

News April 11, 2024

தருமபுரி அருகே குடியிருப்பில் புகுந்த பாம்பு

image

தருமபுரி வட்டம், கிருஷ்ண நகர் அடுத்த A. கொள்ளஹள்ளி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் வீட்டில் ஏப்ரல் 11ம் தேதி பாம்பு ஒன்று புகுந்ததா தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் போ பா வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

News April 11, 2024

அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் 

image

தருமபுரி மக்களவைத் தொகுதி
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக பாமக வேட்பாளர் முனைவர். சௌமியா அன்புமணியை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பொம்மிடி
பேருந்து நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூறாவளி பிரச்சாரம் செய்தார். உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.அரசாங்கம், பிவி செந்தில் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

News April 10, 2024

பாலக்கோட்டில் விவசாயி விபரீத முடிவு

image

பாலக்கோடு திருமல்வாடியை சேர்ந்தவர் அன்பரசி 32. இவர் அலரி பூந்தோட்டம் வைத்து விவசாயம் செய்ய வங்கி கடன் பெற்றுள்ளார். அதனை கட்ட முடியாமல் விரக்தியில் இருந்தவர், இன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி ஜிஹெச்சில் சேர்த்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அங்கு தெரிவித்தனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 10, 2024

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

பாலக்கோடு கிழக்கு ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாமகவில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA அவர்களின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டனர். அப்போது, தர்மபுரி தொகுதி திமுக பார்வையாளர் த.ஆ.கா தருண் மற்றும் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

News April 10, 2024

இன்று பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

image

அரூர் சட்டமன்ற தொகுதியில் தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்.10) மொரப்பூர், அரூர் பேரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கம்பைநல்லூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News April 9, 2024

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்

image

இன்று தர்மபுரி மாவட்டம் கூத்தமடை காலனி பகுதியைச் சார்ந்த ராசாத்தி (23) அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் தர்மபுரி 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது ராசாத்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சசிகலா ராசாத்திக்கு பிரசவம் பார்த்தார். அதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறகு அவசரகால ஓட்டுநர் இளையராஜா பத்திரமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

error: Content is protected !!