Dharmapuri

News May 6, 2024

+2 RESULT: தருமபுரியில் 93.55% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் மாவட்டத்தில் 93.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 91.66 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 95.32 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

தருமபுரி: நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

image

தருமபுரி அருகே உள்ள சோகத்தூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை(மே 7) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எம்.ஜி.ஆர்.நகர், ஏஎஸ்டிசி நகர், நந்தி நகர், பென்னாகரம் மெயின் ரோடு, சத்யா நகர், ஜெ.ஜெ.நகர், வள்ளி நகர், மாந்தோப்பு, வி.ஜெட்டிஅள்ளி, பிடமனேரி, ஏ.ஆர்.கோட்ரஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

image

“பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்கி வரும் வணிகப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணிகர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் பெருந்தொழிலாக வளர்ந்துவரும் வணிகமும், அதிலும் சில்லரை வணிகமும் நாளுக்குநாள் அதிகரித்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது” என எம்எல்ஏ ஜி.கே.மணி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News May 5, 2024

தர்மபுரியில் இலவச கால் பந்து பயிற்சி முகாம்

image

தர்மபுரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. காலை 6-8, மாலை 4-6மணி வரையும் இரண்டு கட்டமாக பயிற்சி நடைபெறும். இதில், 10 முதல் 15 வயது உள்ள பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமை மாவட்ட கால் பந்து கழகத் தலைவர் ஆனந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

News May 5, 2024

சூரை காற்றுடன் வெளுத்து வாங்கிய கன மழை 

image

பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக  வெப்ப அலை வீசியது. இந்நிலையில் நேற்று (4.5.2024) ஒட்டனூர், ஏமனூர், தொதியன், கொட்டாய் கருங்காலி மேடு, நெருப்பூர், காட்டூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் அப்ப பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 4, 2024

தர்மபுரி பிணித்தீர்க்கும் தீர்த்தமலை கோயில்!

image

தர்மபுரியில் உள்ள தீர்த்த கிரீஸ்வரர் கோவில் அரூர்-திருவண்ணாமலை சாலையில் 17 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது . வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது . தெற்கே எம தீர்த்தம் உள்ளது ,இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிடக்கத்தக்கது.

News May 4, 2024

நலம்பள்ளி: தொப்பூர் கணவாயில் விபத்து!

image

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் கணவாயில் இன்று(மே 4) அதிகாலையில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி உருளைக்கிழங்கு ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 4, 2024

தருமபுரி: விதிமீறிய 30 வாகனங்களுக்கு அபராதம்!

image

தருமபுரி நான்கு ரோடு பழைய தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து காவலர்கள் நேற்று(மே 3) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டேட் வங்கி முன்பு போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 30 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

News May 3, 2024

குடிநீர் பிரச்சனை அதிகாரிகள் ஆலோசனை

image

தருமபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், தருமபுரி கலெக்டர் சாந்தி, கிருஷ்ணகிரி கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், சேலம் கூடுதல் ஆட்சியில் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

தர்மபுரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தர்மபுரி மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (மே.02), தர்மபுரியில் ஓரிரு இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!